Published : 16 Feb 2015 08:03 AM
Last Updated : 16 Feb 2015 08:03 AM

அதிமுக அமோக வெற்றி | ஸ்ரீரங்கம் முடிவுகளின் பதிவுகள்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். | விரிவான செய்தி ->ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக 96,500 வாக்குகளில் வெற்றி |

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திப் பதிவுகளின் தொகுப்பு:

16:39 PM: 23-வது சுற்று (இறுதிச்சுற்று) முடிவில், திமுகவை விட 96,516 வாக்குகள் முன்னிலை பெற்று அதிமுக வெற்றி பெற்றது.

16.38 PM: 23-வது சுற்று( இறுதிச்சுற்று) முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,51,561,திமுகவின் என்.ஆனந்த் - 55,045 ,பாஜகவின் சுப்பிரமணியம் - 5015, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1552.

16.10 PM: இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 90,000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

16.00 PM: ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். | >'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன் |

15.58 PM: 22-வது சுற்று முடிவில், திமுகவை விட 92,351 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

15.56 PM: 22-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,45,186 திமுகவின் என்.ஆனந்த் - 52,835,பாஜகவின் சுப்பிரமணியம் - 4834, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1467.

15.47 PM: 21-வது சுற்று முடிவில், திமுகவை விட 88,318 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

15.45 PM: 21-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,38,666 திமுகவின் என்.ஆனந்த் - 50,348, பாஜகவின் சுப்பிரமணியம் - 4,632, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1399.

15.38 PM: 20-வது சுற்று முடிவில், திமுகவை விட 84,663 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

15.35 PM: 20-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,32,587, திமுகவின் என்.ஆனந்த் - 47,924,பாஜகவின் சுப்பிரமணியம் - 4416, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1310.

15.25 PM: 19-வது சுற்று முடிவில், திமுகவை விட 79,797 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

15.24 PM:19-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,25,978,திமுகவின் என்.ஆனந்த் - 46,181,பாஜகவின் சுப்பிரமணியம் - 4282, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1265.

15.15 PM: 18-வது சுற்று முடிவில், திமுகவை விட 74,443 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

15.12 PM: 18-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,18,386, திமுகவின் என்.ஆனந்த் - 43,943,பாஜகவின் சுப்பிரமணியம் - 4049, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1198.

15.10 PM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக ஆரம்பம் முதலே முன்னிலை வகுத்துவரும் நிலையில் ட்விட்டரில் ராமதாஸ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். | >நின்றார்கள்.. நடத்தினார்கள்.. வென்றார்கள்..- ட்விட்டரில் ராமதாஸ் கருத்து|

15.06 PM: 17-வது சுற்று முடிவில், திமுகவை விட 70,292 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

15.05 PM:17 -வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,11,962,திமுகவின் என்.ஆனந்த் - 41,670,பாஜகவின் சுப்பிரமணியம் - 3816, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1130.

14.59 PM: 16-வது சுற்று முடிவில், திமுகவை விட 66,735 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

14.58 PM: 16-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,06,184,திமுகவின் என்.ஆனந்த் - 39,449, பாஜகவின் சுப்பிரமணியம் - 3633, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1089.

14.49 PM: 15-வது சுற்று முடிவில், திமுகவை விட 63,825 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

14.47 PM: 15-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,00,749,திமுகவின் என்.ஆனந்த் - 36,924, பாஜகவின் சுப்பிரமணியம் - 3419, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1015.

14. 35 PM: 14-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 94,278, திமுகவின் என்.ஆனந்த் - 34,052, பாஜகவின் சுப்பிரமணியம் - 3235, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 938

14.30 PM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை தங்கள் கட்சி புறக்கணித்தது நியாயமானதே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். | >ஸ்ரீரங்கம் தேர்தலை காங். புறக்கணித்தது நியாயமே: இளங்கோவன்|

14.20 PM: 13-வது சுற்று முடிவில், திமுகவை விட 56,975 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

14.15 PM: 13-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 88,013, திமுகவின் என்.ஆனந்த் - 31,038, பாஜகவின் சுப்பிரமணியம் - 3104, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 904

13.52 PM: 12-வது சுற்று முடிவில், திமுகவை விட 53,102 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

13.45 PM:12-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 80,864, திமுகவின் என்.ஆனந்த் - 27,762, பாஜகவின் சுப்பிரமணியம் - 2,937, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 868

13.00 PM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது என பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். | >ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது|

12.35 PM: 11-வது சுற்று முடிவில், திமுகவை விட 48,815 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக

12.30 PM: 11-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 73,564, திமுக - 24,749, பாஜகவின் சுப்பிரமணியம் - 2,763, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 780

12.30 PM: கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி. | >வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி|

12.25 PM: 10-வது சுற்று முடிவில், திமுகவை விட 45,504 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக

12.20 PM: 10-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 67,296, திமுக - 21,792, பாஜகவின் சுப்பிரமணியம் - 2,536, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 736

12.16 PM: சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 10-வது சுற்று முடிவில் 749 வாக்குகள் பெற்றுள்ளார் .

12.15 PM: 9-வது சுற்று முடிவில், திமுகவை விட 40,073 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக

12.10 PM: 9-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 60,134, திமுக - 20,062, பாஜக - 2,035, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 672 வாக்குகள் பெற்றுள்ளன.

11.47 AM: 8-வது சுற்று முடிவில், திமுகவை விட 35,177 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

11.45 AM: 8-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 53,586, திமுகவின் என்.ஆனந்த் - 18,409, பாஜகவின் சுப்பிரமணியம் - 1,715, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 573

11.44 AM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து ஆளும் அதிமுக வாக்குகளைப் பெற்றுள்ளது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு. | >ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலத்துக்கு வெற்றி: தமிழிசை|

11.35 AM: 7-வது சுற்று முடிவில், திமுகவை விட 30,078 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

11.32 AM: 7-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 45,545, திமுகவின் என்.ஆனந்த் - 15,467, பாஜகவின் சுப்பிரமணியம் - 1418, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 451

11.16 AM: 6-வது சுற்று முடிவில், திமுகவை விட 24,923 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

11.15 AM: 6-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 38,784, திமுக - 13,861, பாஜக - 1180, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 384

10.55 AM: 5-வது சுற்று முடிவில், திமுகவை விட 19,987 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

10.55 AM: 5-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 32,066, திமுக - 12,079, பாஜக: 890, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 311

10.50 AM: 4-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 24,888, திமுக: 9.414, பாஜக: 671, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 244

10.32 AM: 3-வது சுற்று முடிவில் முன்னிலை நிலவரம்: அதிமுக: 19137, திமுக: 6740, பாஜக: 513, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: 179

10.15 AM: 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

10.10 AM: தொடர்ந்து அதிமுக முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10.00 AM: 2-வது சுற்று முன்னிலை நிலவரம் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி- 12233 வாக்குகள் , திமுக வேட்பாளர் என்.ஆனந்த்- 4140 வாக்குகள் , பாஜக வேட்பாளர்- 351 வாக்குகள் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 83 வாக்குகள் பெற்றுள்ளனர்.

9.45 AM: 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி- 5999 வாக்குகள் பெற்றுள்ளார்.

9.35 AM: இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக முன்னிலை.

9.32 AM: அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 4284 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

8.35 AM: முதல் சுற்று முடிவில் அதிமுக 4284 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

8.30 AM: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:அதிமுக: 6234, திமுக: 1950 பாஜக: 170 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 27

8.25 AM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 81.83% வாக்குகள் பதிவாகின. மொத்தம் பதிவான வாக்குகள்: 2,21,172.

8.20 AM: தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதில்,ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. அதுவும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பதிவாகியிருந்தது.

8.05 AM: கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா அவரை எதிர்த்துப் போடியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்தை 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

8.03 AM: வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடைபெறுகிறது.

8.00 AM: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்:

வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் என 3 பேர் வீதம், மொத்தம் 42 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி என்.கே.போயம் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். இவர், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி மற்றும் அலுவலர்களுடன் நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் பார்வையிட்டார்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு:

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் உள்ளூர் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தியும், தடுப்புகளை அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x