Published : 23 May 2018 02:52 PM
Last Updated : 23 May 2018 02:52 PM

நான் அவுட்டா? இல்லையா?- ஐசிசி உதவியை நாடிய பாகிஸ்தான் தெருவோர சிறுவர்கள்

பாகிஸ்தானில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களிடையே விதிமுறை குறித்த சர்ச்சை எழுந்தநிலையில், அதனை தீர்க்க அவர்கள், ஐசிசியின் உதவியை நாடினர். ஐசிசியும் அவர்களுக்கு உரிய பதில் அளித்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படியே சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற போட்டிகள் தவிர உள்ளூர் அளவில் நடைபெறும் போட்டிகளுக்கும்கூட விதிமுறைகள் குறித்த சர்ச்சை ஏற்பட்டால் ஐசிசி வகுத்த விதிமுறைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ப்படுவது வழக்கம்.

ஆனால், பாகிஸ்தானில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களிடையே, போட்டியின் விதிமுறை குறித்த சர்ச்சை எழுந்தநிலையில், அந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரை சென்றுள்ளது. விதிமுறை குறித்து விளக்கம் கோரிய சிறுவர்களுக்கு உதவி அளித்து ஐசிசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து மாகாணத்தில் தெருவில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது எதிரணி வீரர் வீசிய பந்தை ஹம்சா என்றபவர் அடித்தார். அவர் அடித்த பந்து வேகமாக சென்று கல் ஒன்றின் மீதுபட்டு தெரித்தது. அதே வேகத்தில் திரும்பி வந்த பந்து ஸ்டெம்பின் மீது பட்டு சரிந்தது.

ஹம்சா அவுட் ஆகி விட்டார் என எதிரணியை சேர்ந்தவர்கள் கூறினர். ஆனால் அதனை ஹம்சா ஏற்றுக் கொள்ளவில்லை. இது நோ பால் என்று அவர் வாதிட்டார். இருதரப்பினருக்கும் விதிமுறை முறைதொடர்பாக மோதல் எழுந்தது. இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து ஹம்சாவிற்கு திடீரென யோசனை தோன்றியது.

கிரிக்கெட் விதிமுறைக்கு இறுதி தீர்ப்புச் செல்லும் நடுவராக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட முடிவு செய்தார். இதுதொடர்பான வீடியோவுடன் ஐசிசியின், முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அவர் பதிவிட்டார். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க தெளிவான பதிலளிக்குமாறு கோரினார்.

ஆனால், ஆச்சரியமாக, ஹம்சாவின் கோரிக்கையை ஏற்று, ஐசிசி சிறிது நேரத்தில் ட்விட்டரில் பதிலளித்தது. அதில், ‘‘32.1 விதிமுறைப்படி பவுலர் வீசும் பால் நோ பால் இல்லையென்றால், ஸ்டெம்பில் பட்டால் அவுட் ஆகும். அந்த பால் பேட்ஸ்மேனில் மேல் பட்டாலும், அல்லது வேறு வகையில் பட்டு ஸ்டம்ப் செய்தாலும் அவுட் ஆகும். இந்த அடிப்படையில் பார்த்தால், இது அவுட் தான்,  ஹம்சா நீங்கள் துரதிருஷ்டவசமான பேட்ஸ்மேன’’ என ஐசிசி குறிப்பிடடுள்ளது.

ஐசிசியின் இந்த விளக்கத்திற்கு பின், சிந்து மாகாண சிறுவர்களிடையே கிரிக்கெட் விதிமுறை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x