Published : 19 May 2018 10:50 AM
Last Updated : 19 May 2018 10:50 AM

2வது இன்னிங்சில் பிட்ச் கடினமாக இருந்தது: தோல்விக்குத் தோனியின் காரணம்

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 163 ரன்களை விரட்ட முடியாமல் அதிசயமாக 128/6 என்று முடிந்தது.

முதலில் பிராவோவுக்குக் கடைசி ஓவரைக் கொடுத்தது தவறானது, பிறகு மந்தமான, கடினமான பிட்சில் அடித்துப் பார்க்கக் கூட முடியாமல் சிங்கிள்களை எடுத்தது தோல்விக்குக் காரணமானது மொத்தம் 53 டாட்பால்களை விட்டுக் கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் வரிசை, ராயுடு மட்டும்தான் தேறினார். கடைசியில் ஜடேஜா ஸ்ட்ரைக் ரேட் 150,

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பேசிய தோனி, “2வது பாதியில் பிட்ச் மேலும் கடினமானது. யாரும் மிடில் செய்ய முடியவில்லை. பவுலர்கள் நன்றாக வீசினர்.

இந்தப் பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பதை கணிக்க முடியவில்லை. எது தவறாக முடிந்தது என்று பார்த்தோமானால் அது குறித்து நாம் மிகவும் எதார்த்த அணுகுமுறையே மேற்கொள்ள வேண்டும். அதாவது ஏன் ஏதோவொன்று தவறாகப் போகிறது என்பது பற்றி நாம் நடைமுறை ரீதியாகவே யோசிக்க வேண்டும்.

எங்களுக்குக் காரணங்கள் தெரியும். புள்ளிகள் அட்டவணையை பார்க்கக் கூடாது என்பது முக்கியம். மிடில் ஆர்டரிலும் கூட்டணி அமைக்க வேண்டும். உடல் ரீதியாக என்பதை விட மனரீதியாக தயாராக இருக்க வேண்டும்.

பவுலர்களுக்கு நாம் 100 வித்தியாசமான திட்டங்களை வழங்கலாம் ஆனாலும் சில வேளைகளில் பவுலர்களை மாற்றிப்பார்க்கவே வேண்டியுள்ளது.” என்றார்.

 

இந்த வெற்றிக்காக ஏங்கினோம்: ஷ்ரேயாஸ்

டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறும்போது, “உண்மையில் இந்த வெற்றிக்காக ஏங்கினோம். திருப்திகரமான வெற்றி. இந்தப் பிட்சில் பேட் செய்வது சுலபமல்ல. கடைசி ஓவர் ரன்கள் மிக முக்கியமானது. எங்களுக்குத் தயாரிப்புகளில் எதுவும் பிரச்சினைகள் இல்லை. மாறாக செயல்படுத்துவதில் பிரச்சினை இருந்தது.

பேட்டிங், பீல்டிங், பவுலிங் கிளிக் ஆனது வென்றோம்” என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x