Last Updated : 12 May, 2018 01:12 PM

 

Published : 12 May 2018 01:12 PM
Last Updated : 12 May 2018 01:12 PM

இரு திட்டங்களும் வெற்றி பெற்றிருந்தால் முடிவு மாறியிருக்கும்: பட்லர் ‘கிளாஸ் பிளேயர்’: பிளெமிங் புகழாரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின், முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இரு திட்டங்கள் வைத்திருந்தோம், அது செயல்பாட்டுக்கு வந்திருந்தால், முடிவு மாறியிருக்கும், ஆனால், அனைத்தையும் ஜோஸ்பட்லர் சிதறடித்துவிட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ்பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 95 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

போட்டி முடிந்தபின், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராஜஸ்தான் அணியில் எந்தநேரமும் அபாயகரமான பேட்ஸ்மேன்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லருக்கு எதிராக ஏராளமான திட்டங்கள் வைத்திருந்தோம். இவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுஇருந்தோம்.

இதற்காக இடது கை சுழற்பந்துவீச்சையும் பயன்படுத்தினோம், ஆனால், பட்லரின் ஆர்ப்பரிப்பான பேட்டிங் முன் எதுவுமே எடுபடவில்லை.

ஜெய்பூர் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமானது, இந்த ஆடுகளத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுமையும் பட்லர் பேட் செய்தது சிறப்பானதாகும். பட்லரின் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்தி இருந்தால், போட்டியின் முடிவு மாறி இருக்கும். ஆனால், எங்களின் திட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்ததால், ஒரு பாதி மட்டுமே வெற்றி பெற்றது.

ஸ்டோக்ஸை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டோம், ஆனால், கடைசிவரை 7 பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றிப் பயன்படுத்தியும், பட்லரை எங்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாகத்தான் இருந்தது, ஆனால், பட்லரின் பேட்டிங்குக்கு ஒப்பிடும் போது, இன்னும் சிறப்பாக இருந்தால், அவரின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம்.

பவர்ப்ளே ஓவரில் நாங்கள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியும் முடிவை எங்கள் பக்கம் கொண்டுவர முடியவில்லை. ஆடுகளம் நேரம் செல்லச் செல்ல மெதுவாக மாறும் என்பதால், மெதுவாகப் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினோம். ஆனால், இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சைக் காட்டிலும் மிதவேகப்பந்துவீச்சாளர்களே சிறப்பாகச் செயல்பட்டனர்.

எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், துல்லியமாகப் பந்துவீசினார்கள். ஆனால், பட்லர் நீண்டநேரம் களத்தில் இருந்தது, பந்துவீச்சாளர்களுக்கு ஒருவிதமான நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

கடினமான ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த ரன்களும், விளையாடிய விதமும் மகிழ்ச்சி அளிக்கிறது. பட்லரின் பேட்டிங்தான் ஒட்டுமொத்த ஆட்டத்தின் போக்கை தீர்மானித்து விட்டது

இவ்வாறு பிளெமிங் தெரிவித்தார்.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உனத்கட் ஊடகங்ளிடம் பேசியதாவது:

ராஜஸ்தான் அணியில் கடந்த 4 போட்டிகளாக பட்லர் சிறப்பாக விளையாடி வருகிறார், அணியை முன்னெடுப்பதும் அவராகவே இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக நடுவரிசையில் பேட்ஸ்மென்கள் இருந்தால், அந்த அணிக்கு இன்னும் சிறப்பாக ஆடி இருக்கும். அனைத்து நேரங்களிலும் ஒருவரே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்பது இயலாது.

நடுவரிசையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட் செய்தார்கள், சில சிக்ஸர்களையும் அடித்தார்கள். ஆனால், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அதிகமாகப் பங்களிப்பு செய்ய வேண்டும்.

கடந்த சில போட்டிகளாக ரஹானே விளையாடாவிட்டாலும் கூட அவர் மிகச்சிறந்த வீரர். தனியாக நின்று விளையாடியே சில போட்டிகளை வென்று கொடுக்கும் திறமை படைத்தவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கிடைத்த ஸ்பெஷல் வீரர் ரஹானே. அவருக்கான நேரம் வரும்போது ஸ்பெஷல் இன்னிங்ஸை விளையாடுவார். விரைவில் அவருடைய ஸ்பெஷல் இன்னிங்ஸை பார்க்கலாம்.

இவ்வாறு உனத்கட் தெரிவித்தார்.

 

இதைப் படிக்க மறந்துடாதீங்க...

சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணமா?: தோனியின் விருப்பத்தை நிராகரித்த ஸ்டீபன் பிளெம்மிங்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x