Published : 12 May 2018 01:00 PM
Last Updated : 12 May 2018 01:00 PM

பழனி கோயிலில் உற்சவர் சிலை முறைகேடு: 3-ம் கட்ட விசாரணையைத் தொடங்கினார் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

 பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பான விசாரணையில் சிலையைச் செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கருணாகரன் தலைமையிலான போலீஸார் கோயிலில் சுகி சிவம் உள்ளிட்ட சில குருக்கள்களிடம் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) மூன்றாம் கட்ட விசாரணையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பழனியில் தொடங்கினார். இந்த விசாரணையில் சென்னை ஐஐடி உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான பேராசிரியர் குழுவினரும் உடன் வந்துள்ளனர். இவர்கள் உற்சவ சிலையை ஆய்வுசெய்து அதில் உள்ள உலோகங்களின் அளவுகளை கணக்கிட உள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x