Last Updated : 21 Jul, 2016 11:27 AM

 

Published : 21 Jul 2016 11:27 AM
Last Updated : 21 Jul 2016 11:27 AM

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை |

ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள்

புதிய வரிகள் எதுவும் இல்லாத தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக, ஏழைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. | அதன் விவரம்: >ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் |

தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

* மதுரையில் பால் பொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.

* இலவச அன்னதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு:

* மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9, 073 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண்துறைக்கு ரூ.1,680.73 கோடி நிதி ஒதுக்கீடு.

* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,295.08 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.928 கோடி நிதி ஒதுக்கீடு.

* நலத்திட்டங்கள், மானியங்களுக்காக ரூ.68,211.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு.

* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி நிதி ஒதுக்கீடு.

* மின் துறைக்கு ரூ.13,856 கோடி நிதி ஒதுக்கீடு.

* மாநில சமச்சீர் நிதியத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* இலவச மடிக்கணினிகள், பாடநூல்கள், சீருடைகள் திட்டத்துக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு ரூ,6,102.95 கோடி நிதி ஒதுக்கீடு.

* காவல்துறையை கணினிமயமாக்க ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு.

* இலங்கை அகதிகளுக்காக ரூ.105.98 கோடி ஒதுக்கீடு.

* தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.7.155 கோடி நிதி ஒதுக்கீடு.

* இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தைக் காக்க ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு.

* தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.2,104.49 கோடி ஒதுக்கீடு.

* வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.652.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* அனைவருக்கும் கல்வி (சர்வ ஷிக்ச அபியான்) திட்டத்துக்கு ரூ.2,329.15 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.582.58 கோடி நிதி ஒதுக்கீடு.

* வருவாய் துறைக்கு ரூ.5,656 கோடி நிதி ஒதுக்கீடு.

* தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்கு ரூ. 230 கோடியே 7 ஆயிரம் ஒதுக்கீடு

* சிறைச்சாலைகள் துறைக்கு ரூ. 282 கோடியே 92 லட்சம் ஒதுக்கீடு

* நீதி நிர்வாகம் துறைக்கு ரூ. 993.24 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு

* நுண்ணீர் பாசன முறைக்கு ரூ. 319 கோடி ஒதுக்கீடு

*பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

* தோட்டக்கலைத் துறைக்கு ரூ. 518 கோடியே 19 லட்சம் ஒதுக்கீடு

* கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 1,188 கோடியே 97 லட்சம் ஒதுக்கீடு

* பால்வளத் துறைக்கு ரூ. 121 கோடியே 69 லட்சம் ஒதுக்கீடு

* மீன்வளத் துறைக்கு ரூ. 743 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு

* ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க ரூ. 14 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு

* மீனவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்த ரூ. 62 கோடியே 14 லட்சம் ஒதுக்கீடு

* காடுகளின் பரப்பை அதிகரிக்க ரூ. 52 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு

* தமிழ்நாடு பல்லுயிரின பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 109 கோடியே 51 லட்சம் ஒதுக்கீடு

* சுற்றுச்சூழல், வனத் துறைக்கு ரூ. 652 கோடியே 78 லட்சம் ஒதுக்கீடு

*குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டி, நீர்நிலைகளை மீட்டெடுக்க மாநிலம் தழுவிய இயக்கத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

* கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 140 கோடி ஒதுக்கீடு

* வெள்ளத்தடுப்பு, நீர் ஆதார திட்டங்களுக்கு ரூ. 445 கோடியே 19 லட்சம் ஒதுக்கீடு

* அணைகள் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ. 258 கோடியே 46 லட்சம் ஒதுக்கீடு

* நீர்வள நிலவள திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 950 கோடி ஒதுக்கீடு

* நீர்வளங்கள் ஆதார துறைக்கு ரூ. 3 ஆயிரத்து 406 கோடியே 69 லட்சம் ஒதுக்கீடு

* சாலைகள், பாலங்களை மேம்படுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றிம் பகிர்மான கழகத்தின் கடனை திருப்பிச் செலுத்த ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* சுற்றுலா துறைக்கு ரூ 85 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு

* விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ. 890 கோடி ஒதுக்கீடு

* தொழில் துறைக்கு ரூ. 2 ஆயிரத்து 104 கோடியே 49 லட்சம் ஒதுக்கீடு

* குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறைக்கு ரூ. 342 கோடியே 22 லட்சம் ஒதுக்கீடு

* விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 487 கோடியே 45 கோடி ஒதுக்கீடு

* கைக்கதறி, துணிநூல் துறைக்கு ரூ. 1,129 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு

* கதர் துறைக்கு ரூ 174 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 7 ஆயிரத்து 155 கோடி ஒதுக்கீடு

* எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்துக்கு ரூ. 470 கோடி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 21 ஆயிரத்து 186 கோடியே 58 லட்சம் ஒதுக்கீடு

* திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு

* அடல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றம் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

* நகராட்சி நிர்வாத் துறைக்கு ரூ. 11 ஆயிரத்து 820 கோடி ஒதுக்கீடு

* நடப்பாண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கீடு

* அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்துக்கு ரூ. 689 கோடி ஒதுக்கீடு

* திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு

* சுகாதாரத் துறைக்கு ரூ. 9 ஆயிரத்து 73 கோடி ஒதுக்கீடு

* உயர் கல்வித் துறைக்கு ரூ. 3 ஆயிரத்து 679 கோடி ஒதுக்கீடு

* இளைஞர் நலன் விளையாட்டு துறைக்கு ரூ. 153 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரத்து 462 கோடி. பழங்குடியினர் துணைத் திட்டத்துக்கு ரூ. 722 கோடி ஒதுக்கீடு

* தொழிலாளர் நலத் துறைக்கு ரூ. 152 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு

* சமூக நலத்துறைக்கு ரூ. 4 ஆயிரத்து 512 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு

* ஓய்வூதியம், ஓய்வுகாலப் பலன்களுக்காக ரூ. 18 ஆயிரத்து 868 கோடி ஒதுக்கீடு

* இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக ரூ. 105 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு

தொலைநோக்கு திட்டம் 2023 இலக்குகளை அடைய மாநில அளவில் இந்த 5 இயக்கங்கள் வடிவமைப்பு:

1. நீர் ஆதார மேலாண்மை மற்றும் குடி மராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் இயக்கம்.

2. குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்கிட வீட்டு வசதிக்கான மாநில இயக்கம்.

3. வறுமை ஒழிப்பின் மூலம் ஏழைகளுக்குப் பொருளாதார உயர்வை வழங்குவதற்கான இயக்கம்.

4. தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்.

5. திறன் மேம்பாட்டிற்கான இயக்கம்.

சலுகைகள் சில:

* கறவை மாடு வாங்குவதற்கான நிதி ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.

* பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படும்.

* இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

* சிறுபான்மையினர் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

* இஸ்லாமிய உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறாக உயர்த்தப்படும்.

அறிவிப்புகள்:

* லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் இணையதளம் வழியாகவே ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

* தமிழகத்தில் வரும் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இதற்காக ரூ.183.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ,23,000 கோடி அளவிலான முதலீடுகள் இதுவரை வந்துள்ளன.

* முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ,928 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.

* பொன்னேரி பிளாஸ்டிக் தொழில் முனையம் தேசிய அளவிளான மையமாக மாற்றப்படும்.

* ரூ.52.64 கோடியில் ஆற்றங்கரை ஓரங்களில் மரம் நடும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* 2-வது மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்.

* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு.

* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு ரூ.1,429.94 கோடி ஒதுக்கீடு.

* பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த ரூ.330.06 கோடி ஒதுக்கப்படும்.

* வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ. 355 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடு

* தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த ரூ. 165 கோடி ஒதுக்கீடு

* அதிகமான விபத்துகள் நிகழக் கூடிய பகுதிகளில் சாலை பாதுகாப்புக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு

* முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 206 கோடி ஒதுக்கீடு

* பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு தமிழக அரசின் பங்காக ரூ. 239 கோடி 51 லட்சம் ஒதுக்கீடு

* சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ. 1,680 கோடியே 73 லட்சம் ஒதுக்கீடு

* நடப்பாண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர்க்கடன் ஒதுக்கீடு

* மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.4,000-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிப்பு.

* அடுத்த ஒராண்டில் 3.50 லட்சம் இலவச பட்டா மனைகள் வழங்கப்படும்.

* ஆறுகள் புத்துயிர்த் திட்டத்தின் கீழ் வைகை, நொய்யலாறு தூர்வாரப்படும்.

* அடுத்த ஓராண்டில் மாணவர்களுக்கு 5.35 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படும்.

* அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

* ரூ.422 கோடி செலவில் காவலர்களுக்கு 2,673 வீடுகள் கட்டித்தரப்படும்.

* வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமாக செயல்படும்.

பட்ஜெட் ஒதுக்கீடு:

* திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி

* தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.

* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 கோடி. மொத்த நிதிபற்றாக்குறை ரூ.40,533.84 கோடி.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் வந்ததால், கடந்த பிப்ரவரி 16-ல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றிய பிறகு, சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து, மே 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா மே 23-ம் தேதி பதவியேற்றார்.

அதன்பின், 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை விவாதம் நடந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு ஜூன் 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x