Published : 20 May 2018 02:59 PM
Last Updated : 20 May 2018 02:59 PM

மெரினாவில் நினைவேந்தலுக்குத் தடை: கமல் கருத்து

ஏக்கம், உறவு உள்ளவர்கள் நினைவையாவது ஏந்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மெரினாவில் நடத்துவதற்காக சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் உள்ளரங்குகளிலும் நடத்திய போதும் சில அமைப்புகள், பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அது காவல்துறையின் எச்சரிக்கை. ஏக்கம், உறவு உள்ளவர்கள் நினைவையாவது ஏந்துவார்கள். கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஜனநாயகம் வென்றுள்ளது'' என்று கமல் பதிலளித்தார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து: ரஜினி

கர்நாடகத் தேர்தல்: உச்சத்தில் இருந்த பாஜக, வீழ்ந்தது எப்படி?- ஒர் அலசல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x