Published : 21 May 2018 12:52 PM
Last Updated : 21 May 2018 12:52 PM

‘ரொம்ப ஹேப்பி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸும் போகல’: ப்ரீத்தி ஜிந்தாவின் பேச்சால் சர்ச்சை

எனக்கு ஒரு கண் பறிபோனாலும் பரவாயில்லை, பக்கத்து வீட்டுக் காரரு இரண்டு கண்ணும் பறிபோகனும் என்று ஒரு சிலர் இருப்பார்கள் என்று கதைகளில் கேட்டிருக்கிறோம். ஆனால், சில நேரங்களில் அதுபோன்ற சம்பவங்களும் நடந்து விடுகிறது.

புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி.

ஆனால், தனது அணி தோல்வியுற்றது தரும் வருத்தத்தைக் காட்டிலும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் போனதுதான் மகிழ்ச்சி அளிப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தெரிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

புனேயில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற இக்கட்டான நிலையில் விளையாடியது.

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன்அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்லமுடியாமல் தொடரில் இருந்து வெளியேறிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் நடப்பு சாம்பியன் மும்பை அணி தோற்ற ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிது.

சிஎஸ்கே அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான போட்டியை பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, தனது அணி தோல்வியுற்றதை நினைத்து வருத்தப்படாத ப்ரீத்தி ஜிந்தா, மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாதது நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுதொடர்பான ஒரு வீடியோ வெளியானது அதில் ப்ரீத்தி ஜிந்தா ஒரு நண்பரிடம் பேசுகையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூறுகிறார். இந்த வீடியோ சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதன்பின் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில், சிஎஸ்கே அணியுடனான போட்டியில் கிங்ஸ்லெவன் தோற்றது வருத்தமளிக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள். கடைசி நேரத்தில் கடினமாகப் போராடி தோல்வியுறுவது வருத்தமானது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இன்னும் வலிமையுடன் வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதை படிக்க மறந்துடாதீங்க...

'தல'ன்னா அஜித் மட்டும்தான்; தோனியெல்லாம் கீழே தான்: ஸ்ரீசாந்த் கருத்தால் சர்ச்சை

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x