Published : 05 Aug 2016 10:13 AM
Last Updated : 05 Aug 2016 10:13 AM

சிலை சிலையாம் காரணமாம் - 22: தஞ்சை ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்!

ராஜராஜ சோழன் காலத் தில் தஞ்சை பிரகதீஸ் வரர் கோயிலின் கார்யமாக பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் இருந்தார். இவர் கிபி. 1010-ல் ராஜராஜ சோழனுக்கும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கும் முறையே 74 செ.மீ, 53 செ.மீ. உயரத்தில் செப்புச் சிலைகளை செய்கிறார். ராஜராஜனும் தேவி யும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.

ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார் கார்யம். இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன் றைக்கும் பேசுகிறது.

ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படு கின்றன. அதன்பிறகு அங் கிருந்து எப்படியோ கடத்தப்பட்டு விட்டதால் புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள். ஒரி ஜினல் ராஜராஜன் சிலையானது இப்போது அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தனியார் மியூசியத்தில் ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜ ராஜன் சிலைக்கு காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காக பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதா ரத்துடன் சர்ச்சையை கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

குஜராத் சென்ற தமிழகக் குழு

இதுவே பெரும் சர்ச்சையாகிப் போகவே, ராஜராஜனை மீட்டுவர இந்திராவும் எம்.ஜி.ஆரும் முயற்சி எடுத்தார்கள். அத்தனையும் தோற் றுப்போன நிலையில், 2010-ல் தஞ்சை பெரியகோயில் எழுப்பப் பட்டு, ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவின்போது ஆட்சியில் இருந்த திமுக, ராஜராஜன் சிலையை மீட்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்காக, அப்போ தைய சுற்றுலாத்துறைச் செய லாளர் வெ.இறையன்பு, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொல்லியல் அறிஞர் முனைவர் நாகஸ்வாமி, குடவாயில் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்று குஜராத் சென்றது.

அப்போது குஜராத் முதல்வ ராக இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையை தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் அப்போது இவ் விஷயத்தில் ஆர்வம் காட்டினார் கள். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா?

ராஜராஜன் சிலைதான்

டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், தான் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள் குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள் பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள் ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தெள்ளத்தெளிவாக குறிப் பிட்டிருக்கிறார் முனைவர் நாக ஸ்வாமி.

ஆனால் பிற்பாடு, காலிக்கோ மியூசியத்தில் உள்ள சோழர் காலத்து செப்புச் சிலைகள் குறித்து அந்த மியூசியத்திற்கு ‘கேட்லாக்’ எழுதிக் கொடுத்த நாகஸ்வாமி, முன்பு ராஜராஜன் என்று தான் தெரிவித்த அதே சிலையை, ‘கிங்க் ஆஃப் கிங்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் பேசிய காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்று நாகஸ்வாமி கூறினால், இப்போதே சிலையை உங்களிடம் ஒப்படைக்கத் தயார்’ என்று கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழக குழுவினர் அதீத ஆர்வத்துடன் நாகஸ்வாமியின் முகத்தைப் பார்த்தார்கள். பிறகு என்ன நடந்தது?

- சிலைகள் பேசும்…

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 21: திருநீலக்குடி நடராஜர் சிலை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x