Last Updated : 08 Jul, 2019 05:01 PM

 

Published : 08 Jul 2019 05:01 PM
Last Updated : 08 Jul 2019 05:01 PM

ரோபோக்களுக்கு கோஸ் அறுவடை சவாலான ஒன்று - சொல்கிறார்கள் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள்

ரோபோக்களுக்கு கோஸ் அறுவடை சவாலாதானவே இருக்கிறது என்கிறார்கள் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள்.

லண்டனில் இயங்கிவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் காய்கறிகளைப் பறிக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர். இது இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி ஒரு பொதுவான இடத்தைக் கண்டறிந்து காய்கறிகள் பறித்து எடுத்துப்போடுவது போன்ற சவாலான அறுவடையை மேற்கொள்கிறது.

இயந்திரக் கற்றல் என்பது செயற்கை நுண்ணறிவின் ஒரு பயன்பாடாகும். இது வெளிப்படையாக திட்டமிடப்படாமல் அனுபவங்களிலிருந்து தானாகவே கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவும் கணினிகளுக்குத் திறனை வழங்குகிறது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு உருவாக்கிய 'வெஜிபோட்', ஆரம்பத்தில் ஒரு ஆய்வக அமைப்பில் கோஸ் அடையாளம் கண்டு அறுவடை செய்யப் பயிற்சி பெற்றது.

உள்ளூர் பழம் மற்றும் காய்கறி கூட்டுறவு ஒன்றின் ஒத்துழைப்புடன் பல்வேறு துறைகளில் இது வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது என்று 'தி ஜர்னல் ஆஃப் ஃபீல்ட் ரோபாட்டிக்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மாதிரி ஒரு மனிதத் தொழிலாளரைப் போல எங்கும் வேகமாகவோ அல்லது திறமையாகவோ இல்லை என்றாலும், வேளாண்மையில் ரோபாட்டிக்ஸ் பயன்பாடு எவ்வாறு விரிவாக்கப்படலாம் என்பதை இது நிரூபிக்கிறது. கோஸ் போன்ற பயிர்களுக்குக் கூட இயந்திரத்தனமாக அறுவடை செய்வது என்பது சவாலானது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால், ஏற்கெனவே உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை போன்ற பயிர்கள் பல பத்தாண்டுகளாகவே இயந்திரங்கள் மூலமாக அறுவடை என்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். ஆனால் பல பயிர்கள் இன்றுவரை ஆட்டோமேஷனை எதிர்க்கின்றன. கோஸ் அத்தகைய ஒரு பயிராகும்.

இது இங்கிலாந்தில் வளர்க்கப்படும் கீரைகளின் மிகவும் பொதுவான வகை என்றாலும், தரையில் தட்டையாக வளர்வதால் கோஸ் எளிதில் சேதமடைந்து விடுகிறது. இது ரோபோ மூலம் அறுவடை செய்பவர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது.

"ஒவ்வொரு துறையும் வேறுபட்டது, ஒவ்வொரு கீரையும் வித்தியாசமானது" என்று கேம்பிரிட்ஜின் பொறியியல் துறையைச் சேர்ந்த சைமன் பிர்ரெல் கூறினார்.

"ஆனால் கோஸ் கீரையுடன் சேதமின்றி ஒரு ரோபோ அறுவடை வேலை செய்ய முடியுமென்றால், அதே முறையில் வேறு பல பயிர்களிலும் அறுவடையில் ஈடுபடலாம்.

கோஸ் பயிர் விளைச்சலின் பல்வேறு பகுதிகளையும் எடுத்துக்காட்டும் கேமராவும் இந்த ரோபோவும் முக்கிய அம்சமாகும். கேமராவின் மூலமாக செடிகொடிகளின் அமைப்புகளை உள்வாங்கி அதற்கேற்ப அறுவடை செய்யும் பிளேடை காய்கறியை நோக்கி செலுத்தப்படும் நுண்ணிய வேலைத்திறன்களை செயல்படுத்தி முயன்றுவருகிறோம்.

தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் எங்கள் அடுத்தடுத்த செயல்முறைகளில் இந்த சவால் வெற்றியை நோக்கி எங்களை நகர்த்தும் என்ற நம்பிக்கை  உள்ளது" என்று பிர்ரெல் கூறினார்.

மேலும், வருங்காலத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையைப் போக்க ரோபோக்கள் விவசாயிகளின் நண்பனாக இருப்பான் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x