Published : 28 Jun 2019 12:15 PM
Last Updated : 28 Jun 2019 12:15 PM

ரஷ்யாவுடன் நல்ல நட்புறவில் உள்ளோம்: ட்ரம்ப்

ரஷ்ய அதிபர் புதினுடன் நல்ல நட்புறவில் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்றது. 

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடனான நட்பு குறித்து அமெரிக்க அதிபர் கூறும்போது, ''ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு மிகப் பெருமையான் தருணம். நாங்கள் மிக மிக நல்ல முறையிலான நட்பில் இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஈரானுடனான வர்த்தகம், 5ஜி நெட்வொர்க், இரு நாடுகளின் உறவுகள், பாதுகாப்பு உறவுகள் ஆகியவை குறித்து அதிபர் ட்ரம்ப் - மோடி ஆகியவை ஆலோசனை மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x