Published : 06 Jun 2019 05:28 PM
Last Updated : 06 Jun 2019 05:28 PM

ரஷ்யாவில் 56 டன்கள் எடை கொண்ட 75 அடி நீள பாலம் திடீர் மாயம்: புரியாத புதிரால் குழப்பத்தில் போலீஸ்

ரஷ்யாவின் முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதியின் மேல் இருந்த 56 டன்கள் எடை கொண்ட 75 அடி நீள பாலம் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

இந்தப் பாலம் காணாமல் போனது அதிர்ச்சியைக் கிளப்ப விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது, ஆனால் உள்ளூர்வாசிகளோ திருடர்கள் திருடிச்சென்றிருக்கலாம் என்று கூறிவருகின்றனர்.

 

டெய்லி மெய்ல் அறிக்கையின் படி உம்பா நதியின் உடைக்கப்பட்ட இந்தப் பாலத்தின் மையப்பகுதியான இது 75 அடி நீளம் கோண்டது.

 

மே மாதமே இந்த பாலம் மாயமாக மறைந்தது சமூகவலைத்தளம் ஒன்றில் வளையவந்தது. ஆனால் இந்த சமூகவலைத்தளங்களில் வந்த படங்களில் காணாமல் போன பாலத்தின் சுவடுகள் இல்லை. பாலம் கீழே விழுந்து உடைந்திருந்தால் அதன் இடிபாடுகள் இருக்க வேண்டும், ஆனால் சுத்தமாக பாலமே காணோம் என்பதுதான் தற்போது அதிர்ச்சியாகியுள்ளதாக அந்தச் சமூக வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது.

 

உலோகத் திருடர்களால் இந்தப் பாலம் திருடப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வாசிகள் கூறி வருகின்றனர்.

 

உலோகப்பாகங்களை விற்பதற்காக கும்பல் இதனைத் திருடியிருக்கலாம் ஆனால் இவ்வளவு பெரிய பாலத்தை எப்படி அவர்கள் கொண்டு சென்றிருக்க முடியும் எப்படி ஆபரேட் செய்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x