Published : 24 Apr 2019 03:23 PM
Last Updated : 24 Apr 2019 03:23 PM

இலங்கை: தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஆஸி.யில் படித்தவர், பணக்கார இலங்கை வர்த்தகரின் மகன்

இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபர் ஆஸ்திரேலியாவில் படித்தவர், இவரது தந்தை பணக்கார இலங்கை வர்த்தகர் ஒருவரின் மகன் என்று தெரியவந்துள்ளது.

 

உணவுப்பொருள் விற்பனை வர்த்தகரான மொகமது யூசுப் இப்ராஹிம் என்பவரது மகன் இந்தத் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்.

 

ஈஸ்தர் ஞாயிறன்று ஷாங்ரி-லா மற்றும் சின்னமான் கிராண்ட் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தியது இல்ஹம் அகமது இப்ராஹிம் (31), அகமட் இப்ராஹிம் (33) ஆகியோர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

சகோதரர்களான இவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் நுழைந்து ஒரே நேரத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.  மொத்தம் 9 தற்கொலைப் படை பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர், இதில் ஒருவர் பெண். இவர்கள் நடத்திய உலகை உலுக்கிய கொடூரமான தாக்குதலில் குறைந்தது 359 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதில் இரண்டு ஆஸ்திரேலியர்களும் அடங்குவர்.

 

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

 

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தற்கொலைப் படையினரில் ஒருவர் முன்னதாக ஆஸ்திரேலியா விசா வைத்திருந்தவரா என்பதை ஆஸ்திரேலிய அரசு சொல்ல முடியும் என்றார்.

 

தற்கொலைப் படையைச் சேர்ந்த இல்ஹாம் இப்ராஹிம் வீட்டைப் போலீஸார் சோதனையிடச் சென்ற  போது கர்ப்பவதியான இப்ராஹிமின் மனைவி ஃபாத்திமா தன் குழந்தைகளுடன் தீக்குளித்ததாக ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x