Published : 15 Apr 2019 11:12 AM
Last Updated : 15 Apr 2019 11:12 AM

ஆபத்தான பறவையை செல்லப் பிராணியாக வளர்த்த நபர் அமெரிக்காவில் பரிதாப மரணம்

உலகிலேயே ஆபத்தான பறவையான கசோவாரியை வளர்த்த நபர் ஒருவர் அந்த பறவையாலேயே தாக்கப்பட்டு அமெரிக்காவில் பலியாகி இருக்கிறார்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மார்வின் ஹாஜொஸ் (75) . அவர் வித்தியாசமான செல்லப் பிராணிகளை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதில் கடந்த வெள்ளிக்கிழமை தான் வளர்க்கும் கசோவாரி பறவைக்கு உணவு வைப்பதற்காக சென்று இருக்கிறார் மார்வின்.

அப்போது எதிர்பாராமல் அவர் தடுக்கி விழுந்திருக்கிறார். அப்போது கசோவாரி பறவை தனது கூர்மையான நகங்களால் அவரை பலமாக தாக்கி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபத்தான பறவையான கசோவாரியை செல்லப் பிராணியாக வளர்ப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று அமெரிக்க சராணலய அதிகாரிகள் பலரும் தெரிவித்துள்ளனர். 

கசோவாரி பறவைகள் உலகின் ஆபத்தான பறவையாக கருதப்படுகின்றன. இவை ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x