Published : 11 Apr 2019 03:49 PM
Last Updated : 11 Apr 2019 03:49 PM

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில்அவரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அசாஞ்சேவின் கைது குறித்து போலீஸார் தரப்பில், “ ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே தான் ஒருவேளை  ஸ்விடனுக்கு அனுப்பபட்டால் தான் அமெரிக்காவால் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் ஈக்வேடார் தூரகத்தின் முன்  பத்திரிகையாளரும், அசாஞ்சேவின்ஆதரவாளருமான ஜான் பில்கர் அசாஞ்சேவை பாதுகாக்கும்படி போராட்டம் ஒன்றை நடத்தினார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

47 வயதான ஜூலியான் அசாஞ்சே  அமெரிக்கா தொடர்பான பலதரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்தது. ஜூலியன் அசாஞ்சே கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டர்ம்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இமெயில் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அவர் மீது  குற்றச்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து அசாஞ்சேவுக்கு இணையதளம் மறுக்கப்பட்டு  24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x