Last Updated : 27 Mar, 2019 05:55 AM

 

Published : 27 Mar 2019 05:55 AM
Last Updated : 27 Mar 2019 05:55 AM

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ரூ.6,900 கோடி: அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. அப்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன்படி, சுவர் எழுப்புவதற்காக சுமார் ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் கோரிக்கை வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ட்ரம்ப் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

எதிர்க்கட்சி (ஜனநாயக கட்சி) உறுப்பினர்கள் அதிகம் உள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அவசரநிலையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது. எனினும், ட்ரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தார். அவசரநிலை அமலில் உள்ள நிலையில், பாதுகாப்புத் துறை தலைமையகம், மாற்றியமைக்கப்பட்ட பட்ஜெட் பற்றிய அறிவிக்கையை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், மெக்சிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ரூ.6,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எல்லையில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கி இருப்பதற்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x