Published : 15 Feb 2019 05:45 PM
Last Updated : 15 Feb 2019 05:45 PM

சீனாவுக்கு செல்லும் சவுதி இளவரசர்

சவுதி இளவரசர்  முகமது பின் சல்மான் அடுத்த வாரம் சீனாவுக்கு அரசியல் ரீதியாக சுற்றுப் பயணம் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ”சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அடுத்தவாரம் சீனாவுக்கு வர இருக்கிறார். இளவரசர் சல்மான் வியாழக்கிழமை சவுதி வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தத் சந்திப்பில் சல்மான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், துணை அதிபர் ஹான் சிங்கையும் சந்திக்க உள்ளார். மேலும் இந்த சந்திப்பில் பொருளாதாரம், இரு நாட்டு உறவுக் குறித்த முன்னேற்ற சார்ந்த பேசு வார்த்தைகள் இடப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தவிர்த்து பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சவுதி இளவரசர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

சவுதி பத்திரிகையாளர் கொலைக்குப் பிறகு சவுதி இளவரசர் சல்மா மீது பரவலான விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் இளவரசரின் இந்தப் பயணம் அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x