Published : 09 Feb 2019 12:41 PM
Last Updated : 09 Feb 2019 12:41 PM

ட்ரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளார்: வெள்ளை மாளிகை மருத்துவர் அறிவிப்பு

 

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முழு உடல்நலனுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை மருத்துவர் அறிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். அந்த வகையில் ஜனவரி 2017-ல் அதிபராகப் பொறுப்பேற்ற ட்ரம்ப்புக்கு இரண்டாவது முறையாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த 4 மணி நேரப் பரிசோதனையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

 

வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவின் இயக்குநரும் ட்ரம்ப்பின் மருத்துவருமான சியான் பி கான்லி தலைமையில் 11 பேர் கொண்ட குழு இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது.

 

அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''மருத்துவப் பரிசோதனை முடிவுகளின்படி அதிபர் ட்ரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் பதவிக்காலம் மற்றும் அதையும் தாண்டி இது தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

72 வயதான ட்ரம்ப் புகை பிடிப்பதில்லை. மதுவகைகளை உட்கொள்வதில்லை. ஆனால் நவீன வாழ்க்கைமுறையை விரும்புவர்.

 

துரித உணவுகளின் மீது அலாதியான பிரியம் கொண்ட ட்ரம்ப் பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பீட்சா ஆகியவற்றை விரும்பி உண்பார். கடந்த ஆண்டு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ட்ரம்ப்புக்கு நல்ல ஜீன்கள் இருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x