Published : 13 Dec 2018 04:52 PM
Last Updated : 13 Dec 2018 04:52 PM

விசாரணைக் குழுவின் கேள்விகளுக்கு நடுவில் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த பிரமிளா ஜெயபால்

நானும் நீங்கள் பிறந்த அதே மாநிலத்தில்தான் பிறந்தேன் என்று கூகுள் நிறுவனத்தின் சேவை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்  பிரமிளா ஜெயபால்  சுந்தர் பிச்சையிடம் தெரிவித்தார்.

சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜரான சுந்தர் பிச்சை, சீனாவுக்கான சேவைகளை  அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம் என்று   நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு  விடை அளித்தார். மேலும்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு சற்றும் பதட்டமடையாமல் பதில் அளித்தார்.

இந்த நிலையில் பல காட்டமான கேள்விகளுக்கு இடையே சுந்தர் பிச்சைக்கு முகம் மலர வாழ்த்து ஒன்றை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பிரமிளா ஜெயபால் தெரிவித்தார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சையிடம் அவர் பேசும்போது, ''என்னைக் கொஞ்சம் தனிப்பட்ட விஷியத்தைப் பேச அனுமதியுங்கள். சுந்தர் நானும் இந்தியாவில் நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் பிறந்தேன்.

நீங்கள் கூகுளை நடத்திச் செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குடிபெயர்ந்தவர்கள் இந்த நாட்டுக்குச் செய்யும் மதிப்பை இது காட்டுகிறது.  நன்றி சுந்தர்'' என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x