Published : 10 Dec 2018 06:03 PM
Last Updated : 10 Dec 2018 06:03 PM

ரூ.9,000 கோடி வங்கிக் கடனை செலுத்தாமல் தப்பியோடிய மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பலாம்: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற கிங்ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவை இந் தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி அளவில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக் குத் தப்பிய விஜய் மல்லையா மீது எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் புகார் அளித்தன. அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து அவரது சொத்துகளையும் பரிவர்த் தனைகளையும் முடக்கியது. தப்பி யோடிய பொருளாதார குற்றவாளி மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

சொத்துகள் ஏலம்

மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்காக இங்கி லாந்து அரசுடன் இந்திய அரசு பல் வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன்பேரில் லண்ட னில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான வழக்கு விசா ரணை நடைபெற்றது. விசாரணை களைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் கைது செய்யப் பட்ட மல்லையா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது இந்திய, இங்கிலாந்து சொத்துகள் ஏலத்துக்கு விடப்பட்டன. ஆனால், அவற்றை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன் றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்ன தாக நீதிமன்ற வளாகத்தில் செய்தி யாளர்களிடம் மல்லையா பேசிய போது, "தான் வாங்கிய கடனை வட்டியில்லாமல் 100 சதவீதம் திருப்பித் தருவதாகச் சொன்னதில் எந்த மோசடியுமில்லை" என்றார். மேலும், தான் கடனை திருப்பித் தருவதாகக் கூறிய வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடப்பதாக விளக்கமளித்தார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி எம்மா ஆர்புத்நாட் இறுதி தீர்ப்பை வழங்கினார். அதில், இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இங்கிலாந் துக்கு தப்பி வந்த விஜய் மல்லை யாவை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப எந்தத் தடையுமில்லை. இந்தத் தீர்ப்பு பிரிட்டன் வெளி யுறவுத் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும் என்றும் மல்லை யாவை இந்தியா அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் எடுக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கத் துறையும் சிபிஐயும் வரவேற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிபிஐ செய்தி தொடர்பாளர், “விரைவில் விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்பட்டு இந்த வழக்கு வெற்றிகர மாக முடிக்கப்படும் என எதிர்பார்க் கிறோம். வழக்கில் சிபிஐ கடுமை யான முயற்சிகளை எடுத்திருக் கிறது” என்றார்.

தயார் நிலையில் சிறை

தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே அவருக்காக மும்பை மத்திய சிறையான ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் சிறப்பு அறை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கொண்டு வரப்படும் மல்லையாவை அடைத்து வைக்க இந்தச் சிறை தயார் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு அடுக்குள்ள இந்த சிறைச் சாலையின் அடித்தளத்தில் உள்ள மூன்று அறைகளில் ஒன்றில் விஜய் மல்லையா அடைக்கப்பட உள்ளார். இந்த சிறை பொது சிறையிலிருந்து பிரிக்கப்பட்டு தனியே அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மும்பை தாஜ் ஹோட் டல் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கி லிடப்படுவதற்கு முன்புவரை வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்காகவே இந்த இடம் பலத்த பாதுகாப்பும் கண்காணிப்பும் கொண்டதாக அமைக்கப்பட்டது. இது உச்சகட்ட கண்காணிப்பு உள்ள சிறை ஆகும். சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பிரத்யேக ஆயுதங்கள் ஏந்திய காவலர்கள் இங்கு உள்ள னர். ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பீட்டர் முகர்ஜி தற்போது இங்குதான் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறை 1925-ல் கட்டப்பட்டது. மிக முக்கிய குற்றவாளிகள், பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் பலர் இந்த சிறையில் உள்ளனர்.

விஜய் மல்லையாவிடம் அவரது இறுதி வாதம் பற்றி கேட்டபோது, “என்னை ஊடகங்கள் மிக மோச மாக சித்தரிக்கின்றன. இவை யனைத்துக்கும் அரசியல் பின்னணி உள்ளது. எனக்கு என் பணியாளர் கள்தான் முதலில் முக்கியம். கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை, நீதிமன்றத்தில் நான் செலுத்திய பணத்தை என் பணியாளர்களுக்குச் சம்பளமாக வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தேன். ஆனால், அந்த மனுவுக்கு எந்தவித பதிலும் இதுவரையிலும் இல்லை. என்னுடைய செட்டில்மென்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், முதலில் என் பணியாளர்களுக் குச் சம்பளம் வழங்குங்கள்” என்றார்.

இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய 14 நாட்கள் அவ காசம் தரப்பட்டுள்ளன. வழக்கறிஞர் குழு இந்தத் தீர்ப்பை ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள் என்று மல் லையா மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அருண் ஜேட்லி, “இதுதான் இந்தியாவின் சிறந்த நாள். இந்திய மக்களையும் பொருளாதாரத்தையும் ஏமாற்றி விட்டு யாரும் அவ்வளவு எளிதில் தப்பிவிட முடியாது என்பது இன்று நிரூபணம் ஆகியிருக்கிறது” என்றார்.மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x