Published : 10 Dec 2018 04:24 PM
Last Updated : 10 Dec 2018 04:24 PM

ஐஎஸ்ஸுடனான போரில் வெற்றி: இராக்கில் கொண்டாட்டம்

ஐஎஸ் தீவிரவாதிகளை வெற்றிக் கொண்டு  ஒரு வருடம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இராக் அரசு அதனை சிறப்பாக கொண்டாடியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், பல ஆண்டுகளாகஅச்சுறுத்தலாக இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த போரை இராக்  அரசு கடந்த டிசம்பர் மாதம் வெற்றிக் கொண்டது.  இதனைக் கொண்டாடும் விதமாக இன்று (திங்கட்கிழமை) தேசிய விடுமுறை அறிவித்து இராக் கொண்டாத்தில் ஈடுபட்டது. மேலும் அரசு சார்பில் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.  அந்நாட்டின் தேசியக் கொடி மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

மேலும், இந்தக் கொண்டாட்ட தினத்தில், அரசு தூதரக அலுவலங்கள் போன்றவற்றை காண  பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

 ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக்  நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x