Published : 10 Dec 2018 01:41 PM
Last Updated : 10 Dec 2018 01:41 PM

நாக்கால் மூக்கை மட்டுமல்ல நெற்றியையே தொடும் அதிசய மனிதர்: வைரலாகும் வீடியோ

 

பால்ய நாட்களைக் கடந்த நம்மில் பலர், நாக்கால் மூக்கைத் தொட முயன்றிருப்போம். தீவிர முயற்சியால் அதில் வெகுசிலர் வெற்றியும் அடைந்திருப்போம். மேலும் சிலர் விளையாட்டாக நாக்கைக் கையால் இழுத்து மூக்கைத் தொட வைத்ததுண்டு.

 

ஆனால் நேபாளத்தைச் சேர்ந்த யக்யா பகதூர் கதுவால், தனது நாக்கால் மூக்கைத் தொட்டு, அத்துடன் முன் நெற்றியையும் தொடுகிறார். நேபாளத்தின் உர்லாபரியைச் சேர்ந்த பகதூர் படிப்பறிவில்லாதவர்.

 

தன்னுடைய திறமையைக் கொண்டு மற்றவர்களை மகிழ்விக்க முடிவெடுத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு முறை தான் நாக்கால் நெற்றியைத் தொடும்போதும் குழந்தைகள் அதைக் கண்டு பயப்படுவதாகவும் அதில் சிலர் ஆடையிலேயே சிறுநீர் கழித்ததாகவும் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

 

பெரியவர் ஒருவர் தன்னுடைய செய்கையைக் கண்டு அதிர்ச்சியில் உயிரையே விட்டதாகவும் பகதூர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார். உலகிலேயே தன்னுடைய நாக்குதான் மிகவும் நீளமானது என்று கூறும் பகதூர், பள்ளியொன்றில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.

 

''அங்கு தனது வித்தையைக் காண்பித்தால் வேலை போய்விடும் என்பதால், வேலையை மட்டுமே பார்ப்பேன்'' என்கிறார் கதுவால்.

வீடியோவைக் காண

வீடியோ 

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள  அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x