Published : 17 Nov 2018 11:24 AM
Last Updated : 17 Nov 2018 11:24 AM

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணை: எளிமையாக பதிலளித்துவிட்டேன் - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து  விசாரணையில் எளிமையாக பதிலளித்து விட்டேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப்  பேசும்போது, ”ராபர்ட் முல்லரின் கேள்விகளுக்கு எளிமையாக பதிலளித்துவிட்டேன்.   நீங்கள் எப்போதும் தவறான கண்ணேட்டம் உள்ளவர்களுக்கு கவனமாக பதிலளிக்க வேண்டும்.   நான் இதுவரை எனது பதில்களை விசாரணையாளரிடம் ஒப்படைக்கவில்லை” என்றார்.

கடந்த 2016 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய 6.5 லட்சம் இ-மெயில்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் ஹிலாரியின் உடல்நலம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவின. இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. அதிபர் தேர்தலில் ஹிலாரியை தோற்கடிக்க ரஷ்ய அமைப்புகள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பியதாக ஜனநாயக கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இறுதியில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் விசாரணை குழுவின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் முல்லர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x