Published : 15 Oct 2018 08:34 PM
Last Updated : 15 Oct 2018 08:34 PM

புயல்காற்றில் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஆபத்தைத் தவிர்க்க பக்கவாட்டிலேயே இயக்கி விமானத்தை லேண்ட் செய்த பைலட்: குவியும் பாராட்டு

பிரிட்டனில் கேலம் என்ற புயற்காற்று புரட்டிப் போட்ட்டுக் கொண்டிருந்த சமயம், பிரிஸ்டல் விமான நிலையத்தின் ஓடுபாதை தெரியாத அளவுக்கு காற்று வெளுத்து வாங்கியது.

பிரிஸ்டல் விமான நிலையத்தின் ஓடுபாதையின் குறுக்காக காற்று வலுவாக வீசிக் கொண்டிருந்த சமயம், விமானத்தை நேராக கொண்டு சென்று தரையிறக்க முடியாமல் பயங்கரக் காற்று, விமானம் பயங்கரமாக ஆடியது.

இதனை உணர்ந்த விமானி மிகப்பிரமாதமாக காற்று எந்தப்பக்கத்திலிருந்து வீசுகிறதோ அந்தப் பக்கம் நோக்கி விமானத்தின் முன் பக்கம் (மூக்கு) இருக்குமாறு வைத்து பக்கவாட்டிலேயே மேலேயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன் வேயில் தரையிறக்கிய வீடியோ இண்டெர்நெட்களில் வைரலாகியுள்ளது.

இந்த உத்தியைக் கடைபிடிக்கவில்லை எனில் 40நாட்டிக்கல் மைல் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கும் பயங்கரக்காற்றில் விமானம் என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரிய ஒரு திறமைச் சம்பவம் அக்டோபர் 12ம் தேதி நடந்தது. மிகவும் துல்லியமாக பயங்கரக் காற்றிலும் தரையிறக்கிய பைலட்டுக்கு அரிய பாராட்டுகள் சமூக வலைத்தளத்தில் குவிந்தன.

பலரும் இதனை பிரமிக்கத்தக்க லேண்டிங், என்றும் பிரில்லியண்ட், என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கேலம் புயல் யு.கே.யில் விமானசேவைகளைப் பாதித்ததோடு, கனமழை பெய்யக் காரணமாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x