Published : 20 Sep 2018 02:11 PM
Last Updated : 20 Sep 2018 02:11 PM

ஆங் சான் சூச்சி குறித்து ஃபேஸ்புக்கில் தவறான பதிவு: 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற கட்டுரையாளர்

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி குறித்து ஃபேஸ்புக்கில் தவறாக பதிவிட்ட கட்டுரையாளருக்கு அந்நாட்டு  நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், "நகர் மின் ஸ்வா என்ற கட்டுரையாளர் ஃபேஸ்புக்கில் மியான்மர் தலைவர்  ஆங் சான் சூச்சு குறித்து தவறான பதிவை பதிவிட்டுருந்ததன் காரணமாக செவ்வாய்க்கிழமையன்று யாங்கூன் மேற்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் மத்தியில் சூச்சி குறித்து தவறான எண்ணத்தை பரப்பும் நோக்கில் அவரது பதிவுகள் இருந்ததன் காரணமாக அவருக்கு இந்தத்  தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு ராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது.

இந்த விவகாரத்தில் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வந்தததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவருக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஊகடவியலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மியனமரின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x