Published : 20 Sep 2018 01:00 PM
Last Updated : 20 Sep 2018 01:00 PM

வாடிக்கையாளரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு 60 மில்லியன் டாலர்கள் திருட்டு: ஜப்பான் நிறுவனம் அதிர்ச்சி

ஜப்பானில் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்திவரும் ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது கிட்டத்தட்ட 430 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் திருடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய மையமாக ஜப்பான் திகழ்கிறது. உலகின் முதல் 10 நாடுகளில் பணப்பரிவர்த்தனை இந்நாடு செயல்படுத்திவருகிறது. இங்குள்ள 50 ஆயிரம் கடைகளில் பிட்காயினைச் செலுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

ஒசாகாவை தலையமைகமாகக் கொண்டு இயங்கிவரும் ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களின் கணக்குகளை பராரிக்கும் சர்வர் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திருடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்பணம் முற்றிலுமாக வேறொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது வாடிக்கையாளரின் கணக்கை முறைகேடாக எப்படி பயன்படுத்த முடிந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள கோரியுள்ளோம், இதில் மோனோகாயின், பிட்காயின், பிட்காயின் பணம் ஆகியவைற்றையும் திருடியுள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சாயிப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘‘வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதிக்கப்படாது என்பதற்காக நிறுவனத்தின் நாங்கள் பெயரை வெளியில் சொல்லவிரும்பவில்லை. எங்களின் மிகப்பெரிய பங்குதாரரான பிஸ்கோ குழுமத்தினர் இருப்பதால் எங்களுக்கு பொருளாதார ஆதரவு இருப்பதால் தற்போதைக்கு இப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று நம்புகிறோம்.

எனினும் வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவே டெபாஸிட், பணம் எடுத்தல் ஆகியவற்றில் திருட்டு நடைபெற்ற பிறகு ஜப்பான் அடிப்படையிலான காயின் செக் பண பரிவர்த்தனை மட்டும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இதனால் நெம் எனப்படும் டிஜிட்டல் சொத்திலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒசாகா பணப்பரிவர்த்தனை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள ஹேக்கிங் சம்பவத்தை அடுத்து, அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x