Published : 15 Sep 2018 08:35 AM
Last Updated : 15 Sep 2018 08:35 AM

தென்கொரியாவின் முதல் நீர்மூழ்கி போர்க்கப்பல்

தென்கொரியாவின் முதல் நீர் மூழ்கி போர்க்கப்பல் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.

2-ம் உலகப்போரின் போது கொரியா உடைந்து ரஷ்ய ஆதர வுடன் வடகொரியா, அமெரிக்க ஆதரவுடன் தென்கொரியா நாடு கள் உதயமாகின. கடந்த 1950 முதல் 1953 வரை வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே போர் நடைபெற்றது. அதன்பிறகும் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்திருந்தது.

இருநாட்டு உறவில் திடீர் திருப்பமாக வடகொரியா அமைதிப் பாதைக்கு திரும்பியது. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசினர்.

போர் பதற்றம் நீடித்த காலத்தில் தென்கொரியா முப்படைகளையும் வலுப்படுத்தியது. அந்த வகையில் ரூ.5,031 கோடி செலவில் 3,000 டன் எடையில் அதிநவீன நீர்மூழ்கி போர்க்கப்பலை தென்கொரியா உருவாக்கியுள்ளது. டோசன் ஆன் சாங்-ஹோ என்ற நீர்மூழ்கியில் அதி நவீன ஏவுகணைகள் பொருத்தப் பட்டுள்ளன.

டோவூ கப்பல் கட்டுமானத் தளத்தில் நேற்று நடந்த விழாவில் புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் தொடங்கிவைக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அதிபர் மூன் ஜே இன் பேசியபோது, ‘‘தென் கொரிய பாதுகாப்புத் துறையில் புதிய மைல் கல்லை எட்டியுள் ளோம். அதேநேரம் கொரிய தீப கற்பத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே தென்கொரிய, வடகொரிய மூத்த ராணுவ தள பதிகள் நேற்று பான்மூன்ஜியோம் பகுதியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆயுதங் களை வாபஸ் பெற இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்தன. வடகொரியா வின் கேசாங் நகரில் இருநாடுகள் தரப்பில் ஒருங்கிணைப்பு அலு வலகம் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வடகொரியா, தென்கொரியா இடையிலான 3-வது உச்சி மாநாடு வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இதில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பங்கேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x