Published : 15 Sep 2018 08:32 AM
Last Updated : 15 Sep 2018 08:32 AM

இந்தச் சுரண்டல், இந்தியாவுக்கு நல்லதா?

உலக அரங்கில், சீனா தொடர்ந்து எதிர்மறை விளைவுகளைச் சந் தித்து வருகிறது. அதன் தொடர்ச்சி யாக இரண்டு நாடுகள், சீனாவுடன் செய்துகொண்ட பொருளாதார உடன்படிக்கையை மறுபரி சீலனை செய்யப் போவதாக அறி வித்துள்ளன. ஒன்று - மலேசியா; மற்றது - பாகிஸ்தான்.

தனது கனவுத் திட்டமாக சீன அரசு பிரகடனப்படுத்தும் ‘ஒரே மண் டலம், ஒரே பாதை' கீழான இரண்டு திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்தப் போவதில்லை என்று மலேசிய அரசு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கிழக் குக் கடற்கரை ரயில் இணைப்பு' - தென் சீனக் கடலுடன், மலேசியா வின் மேற்குப் பகுதியில் உள்ள மிக முக்கிய துறைமுகங்களை இணைக்கும் திட்டம். மற்றது - போர்னியோ தீவுப் பகுதியில் வரவிருந்த இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டம்.

‘மிகுந்த செலவு தரும்; தமது பொருளாதாரத்தைத் திவால் ஆக்கி விடும்' என்று, ரத்துக்கான காரணத் தையும் சொல்லி இருக்கிறது மலேசியா. சீனத் திட்டங்கள் அனைத் துமே, தாங்கொணாக் கடன் சுமையைத் திணிக்கக் கூடியன; சமூக, சுற்றுச்சூழலைக் கெடுப்பன; பெருத்த ஊழலுக்கு வழிகோலு வன' என்று அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

பாகிஸ்தானிலும் ஏறத்தாழ இதே நிலைமைதான். ‘சீன நிறுவனங்கள், நியாயமற்ற வரிச் சலுகைகளைப் பெற்று இருக்கின்றன; முந்தைய அரசாங்கம் சீனாவுடன் மோச மான உடன்படிக்கைகளை மேற் கொண்டுள்ளது' என்று, பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், ‘டெய்லி பாகிஸ்தான்' உலகப் பதிப்புக்குத் தந்த பேட்டியில் கூறுகிறார்.

ஆனாலும் இரண்டு விஷயங் களில் சீனாவுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளார். காலனி ஆட்சிக்கு சீனா வழி நடத்துகிறது என்று மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறியதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் இவ்விஷயத்தை அவ்வாறு அணுகாது என்கிறார். (நன்றாக கவனிக்க - மலேசியப் பிரதமர் கூறியதை எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை) மேலும், சீனாவுடன் ஒப்பந்தங்களை ரத்து செய்கிற எண்ணம் இல்லை; ஓராண்டு காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம் என்று மட்டுமே விவாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்.

இதற்கிடையே, சீனா - பாகிஸ் தான் பொருளாதார ‘காரிடார்' தொடர்பாக ஆலோசித்து முடி வெடுப்பதற்காக, சிறப்பு அமைச் சரவைக் குழு ஒன்றை, செப்டம்பர் 4 அன்று, பிரதமர் இம்ரான்கான் நியமித்து உள்ளார். அமெரிக்க நிதி உதவிக்கும் உத்தரவாதம் இல்லை; சீன உதவியோ ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இரண்டுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறது - பாகிஸ்தானியப் பொருளாதாரம்.

இதே போன்றுதான் இலங்கை யிலும். அதிகப் போக்குவரத்து இல்லாத நெடுஞ்சாலைகள், வெறிச்சோடிக் கிடக்கிற விமான நிலையங்கள் என்று, பயன்படாத திட்டங்களில் எல்லாம், சமாளிக்க முடியாத சீனக் கடன்கள், கடும் சவால்களாக முன் நிற்கின்றன. அரசு வருவாயில் 80% வரை, ‘வரலாறு காணாத' கடன்சுமையே தின்று விடுவதாக, ‘வாஷிங்டன் போஸ்ட்' விவரிக்கிறது. ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தில் இந்தோனேசியாவையும் சீனா வஞ்சித்துள்ளது.

இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் சீன அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளை மறு பரிசீலனை செய்கிற எண்ணத்தில் இருப்பதாக ‘வாஷிங்டன் போஸ்ட்' செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது. அதிகரித்து வரும் ‘விலகல்கள்', சீனப் பொருளாதாரத்தைப் பாதிக் கவே செய்யும்.

குறைந்த விலைப் பொருட் களால் அந்நிய சந்தையில் ஆதிக்கம் செலுத்திவரும் சீனா, ஏற்றுமதிச் சரிவால், விரைவில் பொருளாதாரச் சரிவை சந்திக்க நேரிடும் என்றே தோன்றுகிறது.

சீனாவுடன் நமது வர்த்தக உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், பிற நாடுகளின் அனுபவத்தைப் பார்த்து எதுவும் கற்றுக் கொண்டுள்ளார்களா...? சுரண்டல் பொருளாதாரத்தின் மையமாக சீனா செயல்படுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா...? ‘அநியாய வட்டி', ‘நம்பகத்தன்மை அற்ற செயல்பாடு', ‘இரு பக்க நலனைப் பின்னுக்குத் தள்ளி, தன் நலனை மட்டுமே முன் நிறுத்துகிற ‘ஒருபக்க' ஒப்பந்தங் கள்... இந்திய - சீனப் பேச்சுகளில், இது குறித்த அச்சங்கள், அம்சங்கள் இடம் பெறுகின்றனவா.... தெரிய வில்லை. ஒன்று மட்டும் பளிச் செனத் தெரிகிறது. சீனாவின் தவறுகள் சிலரின் கண்களுக்குத் தென்படுவதே இல்லை. அமெரிக்கா உடைத்தால், பொன் குடம்; அதுவே சீனா உடைத்தால், மண் குடம்....?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x