Last Updated : 10 Sep, 2018 05:38 PM

 

Published : 10 Sep 2018 05:38 PM
Last Updated : 10 Sep 2018 05:38 PM

ஒன்பது பேரை நூதனமாகக் கவர்ந்து கொலை செய்த ஜப்பானிய ட்விட்டர் கொலையாளி: உளவியல் சோதனைக்குப் பிறகு ஒப்புதல்

ட்விட்டர் வலைதளம் வழியாக இதுவரை ஒன்பது பேரை கொன்றுவிட்டு தப்பிக்க நினைத்த 27 வயது இளைஞர் ஒருவர் ஜப்பானிய போலீஸில் கடும் விசாரணைக்குப் பிற்கு தனது குற்றங்களை இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.

டகாஹிரோ ஷிராஷி, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக எழுதி ஆட்களை மடக்குவதில் கைதேர்ந்தவர் இவர். ட்விட்டர் மூலமாகவே ஆட்களை திரட்டி இதுவரை செய்த கொலைகள் ஒன்பதைத் தொட்டுவிட்டது என்ற செய்தியை நம்ப முடிகிறதா?

சில மாதங்களுக்குமுன் போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் டாகாஹிரோவின் கொலைகார வீட்டைக் கண்டுபிடித்தார்கள். அக்கொடிய வீட்டின் கதவுக்குப் பின்னால் நடந்த சம்பவங்கள் ரத்தக்கறை படிந்தவை.

அச்சமயம் குளிர்ப்பெட்டிகள் மற்றும் டூல் பாக்ஸ்களில் ஒன்பது சிதைந்த உடல்கள், அதனுடன் உடைந்த 240 மனித எலும்புகள் இருப்பதும கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாரங்களை மறைக்க கேட் லிட்டர் எனப்படும் திரவம் தெளிக்கப்பட்டதும் தெரியவந்தது.

உடல்களைக் கண்டுபிடித்த அன்றே அந்நபர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். ஆனால், எட்டு பெண்கள் ஒரு ஆண் ஆகிய ஒன்பதுபேரை கொன்றதைக் குறித்து தொடர்ந்து மவுனம் சாதித்துள்ளார் இந்நபர்.

என்ன நடந்தது? யார் இவர்கள் போன்ற உண்மைகளைக் கண்டறிய டோக்கியோ போலீஸ் அந்நபரை தீவிர உளவியல் பரிசோதனைக்கு இவரை உட்படுத்தினர். கல்லுளிமஙுகத்தனம் மெல்ல உடைபட்டு உளவியல் சோதனையில் எல்லா உண்மைகளையும் கொட்டினார்.

தற்கொலை மனப்பான்மை கொண்டிருக்கும் சிலர் தங்கள் ட்விட்டர் தளம் வழியாக தங்கள் எண்ணங்களை வெளிப்பதுத்துவார்களாம். அதை மோப்பம் பிடித்து அவர்களை உள்பாக்ஸ் வழியாக தேடி கண்டுபிடித்துவிடுவாராம். அவர்களுக்கு உதவுவதுபோல நடித்து அல்லது தானும் அவர்களோடு தற்கொலை செய்துகொள்ளும் திட்டத்தில் உள்ளதுபோல பாவனை செய்து அவர்களை வரவழைத்து முதலில் அவர்களைக் கொன்றுவிடுவாராம் இந்த வலைதள கொலையாளி.

தான் செய்த அத்தனைக் கொலைகளையும் டகாஹிரோ ஷிராஷி ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய உள்ளூர் செய்தி நிறுவனம் ஜிஜி பிரஸ் ஏஜென்ஸி தெரிவிக்கிறது.

சமூக வலைத்தளங்களை கவனமாக கையாள வேண்டும் என்று ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மீறி உலகம் முழுவதும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருவதை தடுக்கமுடியாத சூழலே இன்று நிலவுகிறது.

இந்நிலையில் இக்கொலைகளைப் பற்றிய செய்தி ஜப்பான் பொதுமக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x