Published : 24 Aug 2018 03:02 PM
Last Updated : 24 Aug 2018 03:02 PM

தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம்: ஹார்வர்ட் பேராசிரியர் பேச்சால் சர்ச்சை

தேங்காய் எண்ணெய்யை சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைகழக பேரசாரியர்  ஒருவர் கூறிய கருத்து தற்போது பலத்த எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.

இந்தியாவின் தென் மாவட்டங்கள் உட்பட  உலகின் பல இடங்களில் தேங்காய் எண்ணெய் உணவுக்காகவும், முக பொலிவு சார்ந்த அழகு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் தேங்காய் எண்ணெய்யை சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் என்று  கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து  ஜெர்மனியில் பல்கலைகழகம் ஒன்றில்   நடந்த கருந்தரங்கில் மிஷெல்ஸ் பேசும்போது, "தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷமாகும்.  நான் தேங்காய் எண்ணையை அழகு சார்ந்த பொருட்களில் உபயோகிப்பது குறித்து பேசவில்லை. அதை உணவில் சேர்த்து கொள்வது குறித்து பேசுகிறேன்.

லார்ட்டை  (பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்) விட தேங்காய் எண்ணெய் மோசமானது. தேங்காய் எண்ணெய் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படும் சதவீதம் மிகக் குறைவு.

இதுகுறித்த உங்களை நான் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும். நீங்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் மோசமானது தேங்காய் எண்ணெய்” என்று கூறியுள்ளார்.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு தீங்கானது என்று கூறுவது இது முதல்முறை அல்ல, கடந்த வருடம்  அமெரிக்கவில் இயங்கும் இருதய நலன் சார்ந்து இயங்கும் தன்னார்வ அமைப்பு தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அதனை உணவில் சேர்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்  என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x