Last Updated : 17 Aug, 2018 03:33 PM

 

Published : 17 Aug 2018 03:33 PM
Last Updated : 17 Aug 2018 03:33 PM

குழந்தைக்குக் குடியுரிமை... ஆனால் தாயார் நாடுகடத்தப்பட வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு வினோத வழக்கு

பிறந்த 11 மாதங்களே ஆன நிலையில் குழந்தையைப் பிரிந்து அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தபபட வேண்டிய சூழலுக்கு எல் சால்வடார் பெண் ஆளாகியுள்ளார்.

தனது குழந்தையின் நிலையை எண்ணியாவது குழந்தையை என்னுடன் சேர்த்துவையுங்கள் என்று அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

லெய்டி டியூனாஸ்-க்ளாரோஸ், 30,  இவர் ஏற்கெனவே, தன் மீதான நாடுகடத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் அவரது புகலிட கோரிக்கையையே மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் விரும்புகிறது.

இக்கட்டான இச்சூழ்நிலையில் இன்று பிற்பகல் இதன் வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது.

டியூனாஸுவின் வழக்கறிஞர் கிளாடியா ஓ பிரைன் கூறியதாவது:

நீதிபதியின் முன் கோரிக்கையை வைக்க நாங்கள் காத்திருக்கிறோம். இதுகுறித்து பின்னர்தான் விளக்கமாக கருத்து தெரிவிக்க முடியும். டியூனாஸ் இன்று நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளார். ஆனால் இந்நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், டியூனாஸ் தனது 11 மாத பெண் குழந்தையுடன் அமெரிக்காவுக்கு வந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் ஒன்று அமெரிக்க உரிமை பெற்றுவிட்டதால் அமெரிக்க குடிமக்களுக்கான வழக்கப்படி தஞ்சம் கோரியள்ளார். நாட்டின் எல்லையைக் கடந்ததால் அவரும் அவரது குழந்தையும் பிரிக்கப்பட்டுவிட்டனர்.

குழந்தையைப் பிரிந்த தாய் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிரமத்திற்குள்ளாகிவருகிறார். கடும் வேதனையை அனுபவித்து வருகிறார். பிரிவதற்கு முன் தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கட்டாயப்படுத்தி பிரித்ததன் காரணமாக இவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்''

இவ்வாறு டியூனாஸின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜூலை இறுதியில் டியூனாஸ் தஞ்சம் புகுவதற்கான அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதேநேரம், மீண்டும் இணைந்த குடும்பங்களின் நாடுகடத்தலை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்ட கலிபோர்னியா பெடரல் நீதிபதி அந்த உத்தரவை நீட்டித்து உத்தரவை நிரந்தரமாக்கலாமா என்பதற்கு விவாதம் செய்வதற்காக நேரம் ஒதுக்கவும் அவர் அனுமதி வழங்கினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் மாதத்தில் ஒரு உத்தரவிட்டார். இப்படி புலம்பெயரும் குடும்பங்களிலிருந்து குழந்தைகளை பிரிக்கக்கூடாது என்பதுதான் அந்த சட்டம். அதனால் பெரும்பாலும் அம்மாவும் மகளும் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்கிறது சிஎன்என் தொலைக்காட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x