Published : 11 Aug 2018 08:33 AM
Last Updated : 11 Aug 2018 08:33 AM

பகிரங்கமாக வாக்களித்த விவகாரம்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கோரினார் இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர் தலின்போது பகிரங்கமாக வாக் களித்தது தொடர்பாக அந்த நாட்டு தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சீட்டு அடிப்படை யில் நடைபெற்றது. இஸ்லாமா பாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், தடுப்பு திரைக்குள் சென்று வாக்களிக்காமல் தேர்தல் அலுவலர் மேஜையில் அனைவரும் பார்க்கும் வகையில் பகிரங்கமாக தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் கோரி இம்ரான் கானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப் பியது. இதனால் பிரதமராக அவர் பதவி ஏற்பதில் சிக்கல் எழுந்தது.

இதுதொடர்பாக இம்ரான் கான் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். அவரது மன்னிப்பு கடிதம் தேர்தல் ஆணையத்திடம் நேற்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

நான் வாக்களித்தபோது எனக்கு தெரியாமல் ஊடக வீடியோ கிராபர்கள், புகைப்பட கலைஞர்கள் படம் எடுத்து விட்டனர். விதியை மீற வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. எனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரு கிறேன். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார். இம்ரான் கானின் மன்னிப்பை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ-இன் சாப் கட்சி செய்தித் தொடர்பாளர் பாசல் ஜாவித் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், வரும் 18-ம் தேதி இம்ரான் கான் பிரதமராக பதவியேற்பார். இந்த விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து, சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x