Published : 31 Jul 2018 09:14 AM
Last Updated : 31 Jul 2018 09:14 AM

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா: ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) சட்டவிரோதமாக தங்கி யிருப்பவர்களுக்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்கவுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பாக துபாயில் உள்ள இருப்பிடம் மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரகத்தின் (ஜிடிஆர்எப்ஏ) உயரதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் கலஃப் அல் கேத் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எதிர்வரும் விசா பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் தங்கள் அந்தஸ்தை ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம். இவர் கள் இங்கு வேலை தேடிக்கொள் வதற்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்கப்படும். இந்த விசா கேட்டு இவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்நாட்டில் உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் (எம்எச்ஆர்இ) பதிவு செய்துள்ள வர்களுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். தற்காலிக விசா வழங் கப்பட்டவர்கள் 6 மாத காலத்துக் குள் வேலை தேடிக்கொள்ள வேண்டும். இயலாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண் டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

விசா பொது மன்னிப்பு திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதையொட்டி துபாயில் உள்ள அல் அவீர் இமிகிரேஷன் மையத் தில் இத்திட்டத்தின் கீழ் தற்காலிக விசா கேட்டு விண்ணப்பிக்கலாம் என ஜிடிஆர்எப்ஏ அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x