Published : 24 Jul 2018 07:53 AM
Last Updated : 24 Jul 2018 07:53 AM

சூரியனின் மேற்பரப்பில் ஆராய்ச்சி: விண்கலம் அனுப்பும் முயற்சியில் நாசா

விண்வெளியில் பல ஆராய்ச்சி களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மேற் கொண்டு வருகிறது. சந்திரன், செவ்வாய், வியாழன் உள்ளிட்ட வற்றில் நாசா அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக சூரியனின் மேற்பரப்பில் ஆய்வு நடத்த கார் அளவிலான பெரிய விண்கலத்தை ஆகஸ்ட் மாதம் அனுப்ப உள்ளது.

சூரியனை நோக்கிச் செல்லும் இந்த விண்கலமானது, சூரியனின் மேற்பரப்பு பகுதிக்கு அருகில் சென்று பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளது. சூரியனின் வெப்பக் கதிர்களைத் தாங்கும் விதத்தில் இந்த விண்கலமானது மிகவும் வலுவுடன் உருவாக்கப் படவுள்ளது.

இதுகுறித்து நாசாவுக்குச் சொந்தமான கோட்டார்ட் விண் வெளி கல மையத்தின் உதவி இயக்குநர் (ஹெலியோபிசிக்ஸ் அறிவியல் பிரிவு) அலெக்ஸ் யங் கூறியதாவது:

பூமியிலிருந்து 40 லட்சம் மைல் கள் தூரத்தில் சூரிய மேற்பரப்பு அமைந்துள்ளது. பூமியிலிருந்து சூரியன் வெகு தூரத்தில் அமைந் திருப்பதால் அவ்வளவு தூரம் செல்லும் சக்தி படைத்த விண்கலம், அதற்கான விசேஷ கருவிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

சூரிய வளிமண்டலத்திலிருந்து தொடர்ச்சியாக காந்த சக்தி கொண்ட பொருட்கள் வெளிப்புற மாக பூமிக்கு வந்துகொண்டே இருக்கிறது. அந்த பொருட் களானது புளூட்டோவின் சுற்றுப் பாதைக்கு அப்பால் நமது சூரிய மண்டலத்தை சூழ்ந்துகொண்டு உலகைப் பாதிக்கிறது. இதுபோன்ற பல்வேறு விஷயங்களை இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x