Last Updated : 20 Jul, 2018 08:50 PM

 

Published : 20 Jul 2018 08:50 PM
Last Updated : 20 Jul 2018 08:50 PM

‘இடியட்’ என்று கூகுளில் தேடினால் யார் படம் வரும் தெரியுமா?

கூகுள் தேடுதளத்தில் ஆங்கிலத்தில் ‘இடியட்’ என்ற பெயரைப் பதிவிட்டு தேடினால், அதிர்ந்து போவீர்கள். பலநேரங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் இப்போதும் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டுகிறது.

ஒருநேரத்தில் இந்தியில் பிகு என்று பதிவிட்டு புகைப்படத்தைத் தேடினால், பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது. இந்தியில் பிகு என்பது பொய்காரர் என்று பெயர். பிரதமர் மோடியின் புகைப்படம் வந்ததற்கு அனைத்துத் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, இந்தியில் பப்பு என்று பதிவிட்டபோது ராகுல் காந்தியின் புகைப்படமும் வந்தது. இதைக்காட்டிலும் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் முதல் பிரதமர் என்று கேள்வி எழுப்பி புகைப்படத்தைத் தேடினால், பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது. இதுபோன்று கூகுள் தேடுதளத்தில் அவ்வப்போது நகைச்சுவையான, பொருத்தமில்லாத படங்கள் வெளியாகின.

இப்போது ஆங்கிலத்தில் 'இடியட்' (முட்டாள்) என்ற பெயரைப் பதிவிட்டுத் தேடினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புகைப்படம்தான் முதலில் வருகிறது. கூகுள் அல்காரிதத்தில் அதிகமாகத் தேடப்படும் புகைப்படம் முதலில் வரும் என்பதால், டிரம்ப்பின் புகைப்படம் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில போராட்டக்காரர்கள் செய்த விஷமச் செயலால் அல்காரிதத்தில் செயற்கையாகச் செய்யப்பட்ட தவறுகளால் இப்படி டிரம்ப்பின் புகைப்படம் வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகளால் எரிச்சல் அடைந்த ஆன்லைன் பயன்பாட்டாளர்கள், ரெடிட் என்ற இணையதளத்தில் முட்டாள் என்ற வார்த்தையையும், டிரம்ப்பின் புகைப்படத்தையும் இணைக்கும் வார்த்தையை வாக்கெடுப்பு மூலம் உருவாக்கினார்கள். இதைக் கூகுளின் தேடுதளத்தில் அல்காரிதத்தில் இணைத்துவிட்டனர். இதன் காரணமாக யார் இடியட் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டாலும் அதற்கு டிரம்ப் புகைப்படத்தைக் காட்டுகிறது. இப்போது இந்த இடியட் என்ற வார்த்தை அனைவராலும் கூகுள் தேடுதளத்தில் பதிவு செய்யப்பட்டு டிரம்ப் புகைப்படத்தைத் தேடி வருகின்றனர்.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x