Published : 17 Jul 2018 02:05 PM
Last Updated : 17 Jul 2018 02:05 PM

சவுதியில் பாடகரை கட்டிப் பிடித்த பெண் கைது

சவுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப் பிடித்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சவுதி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "பாடகர் மஜித் அல் மோகன்திஸ் வெள்ளிக்கிழமை தைப் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தார். அப்போது  மேடைக்கு திடீரென வந்த பெண் ஒருவர் மொகன்திஸ்ஸை கட்டிப் பிடித்துக் கொண்டார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அப்பெண்ணை அவரிடமிருந்து பிரித்து அழைத்து சென்றனர்.

இந்தநிலையில் அப்பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண்ணின் மீது துன்புறுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று சவுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அப்பெண்ணுக்கு 2 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் ஆண், பெண் இருவரும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். சமீப காலமாகத்தான் சவுதியில் கார் ஓட்டுவது, தொழில் நிறுவனம் தொடங்குவது போன்றவற்றில் பெண்களுக்கு விதித்த கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே இந்த கைது நடவடிக்கையை சவுதி மகளிர் அமைப்புகள் விமர்சனம் செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x