Published : 10 Jun 2018 09:10 AM
Last Updated : 10 Jun 2018 09:10 AM

அமெரிக்காவுடன் நட்புறவுக்கு தயார்: ரஷ்யா அறிவிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்று டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்தார். அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது. இதுகுறித்து அமெரிக்காதான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.

சர்வதேச மாநாடுகளில் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசியுள்ளேன். ஆனால் அந்த சந்திப்புகள் இருநாட்டு உறவை மேம்படுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இருதரப்புக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு புதின் தெரிவித்தார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த அமைப்பில் மீண்டும் ரஷ்யாவை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x