Last Updated : 30 Apr, 2018 09:07 PM

 

Published : 30 Apr 2018 09:07 PM
Last Updated : 30 Apr 2018 09:07 PM

கென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவுக்கு 100 பேர் பலி; 2 லட்சம் பேர் வெளியேற்றம்

கென்யா கிழக்குப் பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர், வாரக்கணக்கில் மழை வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை சுமார் 2 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் முதல் பெய்யத் தொடங்கிய மழைக்கு இதுவரை 100 பேர் பலியாகியிருப்பதாக ரெட் கிராஸ் கூறியுள்ளது.

ஆனால் இது பேரழிவு இடர் என்றும் இதற்கு மக்கள் உதவிக்கு நிதியுதவி தேவை என்று செஞ்சிலுவைச் சங்கம் கோரியுள்ளது.

வடக்கு கென்யா மற்றும் மத்திய கென்யாவில் முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகரம் நைரோபியிலிருந்து மொம்பாஸா துறைமுகத்துக்குச் செல்லும் வழியெங்கும் வெள்ளக்காடாகியுள்ளது.

மலைப்பகுதியில் வாழ்ந்தவர்களின் வீடுகள் நிலச்சரிவில் சிக்க அதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் இன்னும் மீட்புப் படையினர் தேவைப்படுகின்றனர், மக்கள் உதவிக்கு மேலும் நிதியும் தேவைப்படுகிறது.

எங்கும் காணினும் வெள்ளமடா என்ற நிலையில் தண்ணீர் மூலம் பரவும் நோய்களுக்கான ஆபத்தும் அதிகரித்துள்ளது.

தேசியப் பேரிடராக இதனை அறிவித்தால்தான் இதற்கான நிதியைத் திரட்ட முடியும். தேசிய பேரழிவு மேலாண்மை நிதியம் அமைக்கப்பட வேண்டும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

புவிவெப்பமடைதலால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்களினால் இப்படிப்பட்ட தீவிர இயற்கைச் சீற்றங்கள் ஆப்பிரிக்க நாடுகளை கடுமையாகப் பாதித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x