Published : 20 Mar 2018 05:36 PM
Last Updated : 20 Mar 2018 05:36 PM

உங்களது ஒவ்வொரு தோட்டாக்களும் எதிரிகளை வீழ்த்த வேண்டும்: சிரிய அதிபர் வீடியோவால் கடும் சர்ச்சை

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கவுட்டா நகரத்தை சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் பார்வையிட்டார்.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்தின் அரசு படைக்கும்  சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளிக்கின் றன.

ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீத பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போது கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் அதிபர் ஆசாத் படைகள் கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 1,260 பேர் பலியாகி உள்ளனர். 22 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து பெருமளவு கைபற்றப்பட்ட கவுட்டா நகரத்தை சிரிய அதிபர் பாஷார் அல் ஆசாத் பார்வையிட்டிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை சிரிய அரசு வெளியிட்டுருக்கிறது.

அந்த வீடியோவில் பஷார்,கவுட்டா நகரில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையாளர்களுக்கு பஷார் அறிமுகப்படுத்துக்கிறார். "நான் கவுட்டாவின் தற்போதைய நிலைமை குறித்து பார்க்க இருக்கிறோம். அங்குள்ள நமது அரசுப் படை வீரர்களை பார்க்க உள்ளோம்”"என்கிறார்.

சுற்றிலும் கட்டிடங்கள் சரிந்த நிலையில், அரசுப் படை வீரர்களின் இருப்பிடத்துக்கு வந்த பஷாரை வீரர்கள் பலரும் கைதட்டி வரவேற்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து பஷார் பேசும்போது,

"தீவிரவாதிகளால் நாட்டில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக வீரர்கள் ஏதோ சூழலில் கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பது ஒருவித வலிதான். உங்களது ஒவ்வொரு தோட்டாக்களும் எதிரிகளை வீழ்த்த வேண்டும்" என்கிறார்.

சிரியாவில் நடக்கும் உள் நாட்டு போரினால் லட்சகணக்கான மக்கள் இறந்த நிலையில் பஷாரின் இந்த வீடியோ தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x