Published : 20 Mar 2018 05:25 PM
Last Updated : 20 Mar 2018 05:25 PM

‘வீடியோ கேம்’க்கு இப்படியா செய்வது? - சகோதரியை சுட்டுக்கொன்ற சிறுவன்

அமெரிக்காவில் வீடியோ கேம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுவன் ஒருவன், தன் உடன் பிறந்த 13 வயது சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிபியில் உள்ள மொர்னே என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உடன் பிறந்தவர்களான 13 வயது சிறுமியும், 9 வயது சிறுவனும் தங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீடியோ கேம் விளையாடும் கருவியை யார் வைத்துக் கொள்வது என்பது குறித்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது வீட்டு அலமாரியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்த அந்த 9 வயது சிறுவன், தனது சகோதரியை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அதில் சிறுமியின் தலையின் பின் பகுதியில் குண்டு தாக்கியது. துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிவியில் பார்த்து துப்பாக்கியால் சுடுவதற்கு கற்றுக் கொண்டதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக அவர்களின் பெற்றோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x