Published : 03 Mar 2018 09:12 AM
Last Updated : 03 Mar 2018 09:12 AM

அஜர்பைஜானில் தீ விபத்தில் சிக்கி 30 பேர் பலி

அஜர்பைஜான் தலைநகர் பாகூவில் போதை மறுவாழ்வு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தின் முதல் தளத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே மையம் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால், நோயாளிகளும், மருத்துவ ஊழியர்களும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர், அங்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தீயில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

மையத்தின் முதல் தளத்தில் நடக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளே இருந்ததால், தீ விபத்தின்போது அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதுவே, அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x