Last Updated : 13 Feb, 2018 03:17 PM

 

Published : 13 Feb 2018 03:17 PM
Last Updated : 13 Feb 2018 03:17 PM

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் அமைப்புகளுக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் தீவிரம்

 

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி ஹபிஸ் சயீத்தின் ஜமா உத் உதவா மற்றும் பல்லாஹ் ஐ இன்சானியாட் அறக்கட்டளைக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் அடுத்த வாரம் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் அதிரடி எப்ஏடிஎப் மாநாடு நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் பாகிஸ்தான் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபர் மன்மூன் ஹூசைன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தார். இந்த அவசரச்சட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், அவர்களின் அமைப்புகளுக்கும் நிதி அளிக்கும் தனி மனிதர்கள், அமைப்புகளை கைது செய்யவும், அவர்களின் வங்கிக் கணக்குளை முடக்கவும், அலுவலகங்களை சீல் வைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்த தனிமனிதர்கள் அமைப்புகளுக்கு தடை விதிக்கும் நோக்கிலும் இது கொண்டுவரப்பட்டது.

கடந்த மாதம் சாஹித் அப்பாஸி தலைமையில் செயல்படும் ஜேயுடி மற்றும் எப்ஐஎப் உள்ளிட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்தது.

பாகிஸ்தான் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரமாக செய்வதற்கு காரணம் வரும் 18-ம் தேதி எப்ஏடிஎப் மாநாடு பாரிஸில் நடக்கிறது. இந்த மாநாட்டில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் விவாதிக்கின்றன.

இந்த நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் பாகிஸ்தான் கறுப்புபட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் விரைவாக நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது.

இதன் காரணமாக, மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தீவிரவாத ஹபிஸ் சயித்தின் ஜமா உத் தவா அமைப்புக்கும், பல்லாஹ் ஐ இன்சானியாட் அறக்கட்டளைக்கும் அடுத்தகட்டமாக பாகிஸ்தான் அரசு தடைவிதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முயற்சியில் பாகிஸ்தான் அரசு இருப்பதை, தேசிய தீவிரவாத தடுப்பு ஆணையம், தீவிரவாதிகளுக்கா நிதி தடுப்பு அமைப்பும் உறுதி செய்துள்ளன.

தீவிரவாதிகளை ஒழிப்பதிலும், அவர்களுக்கு நிதி உதவியைத் தடுப்பதிலும் தீவிரமாக செயல்பட்டுவருவதாக பாகிஸ்தான் அரசு சர்வதேச அளவில் அறிக்கை விட்டாலும், அந்த நாட்டில் ஜமா உத் தவா, லஷ்கர் இ தாய்பா, பல்லாஹ் இ இன்சானியத் அமைப்பு சுதந்திரமாகவே செயல்பட்டு, நிதி உதவியை திரட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x