Published : 13 Feb 2018 10:16 AM
Last Updated : 13 Feb 2018 10:16 AM

இந்தோனேசியாவின் முல்யானிக்கு உலகின் சிறந்த அமைச்சர் விருது: அரசுகள் உச்சி மாநாட்டில் வழங்கப்பட்டது

இந்தோனேசியாவைச் சேர்ந்த நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி உலகிலேயே சிறந்த அமைச்சர் விருது வழங்கப் பட்டது.

ஐக்கிய அரசு அமீரகத்தின் துபை நகரில் நேற்று முன்தினம் 6-வது சர்வதேச அரசுகள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரக பிரதமரும் துணை அதிபரும் துபை ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், இந்தோனேசிய நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதிக்கு உலகின் சிறந்த அமைச்சர் விருதை வழங்கினார்.

உழலுக்கு எதிராக போராடியதுடன் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக முக்கிய பங்கு வகித்தமைக்காக இந்திராவதிக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக மாநாட்டு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்ற இந்திராவதி, இந்தோனேசிய பொருளாதாரம் வலுவடைய முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவரது முயற்சியால் முதலீ டு கள் அதிகரித்துள்ளன. இவர் இதற்கு முன்பு உலக வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், இந்தோனேசிய நிதி அமைச்சராகவும் (2005-10) பதவி வகித்துள்ளார். மேலும் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 38-வது இடம் பிடித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x