Published : 03 Jul 2017 07:52 AM
Last Updated : 03 Jul 2017 07:52 AM

வியாழன் கோளில் மேகக் கூட்டம்: அரிய புகைப்படத்தை எடுத்தது நாசா தொலைநோக்கி

சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் கோளின் (ஜூபிடர்) வளிமண்டலத்தில் ஒளி மற்றும் இருள் மேகங்கள் சூழ்ந்து இருக்கும் அரிய புகைப்படத்தை நாசாவின் ஜெமினி தொலைநோக்கி எடுத்துள்ளது.

சூரிய மண்டலத்தில் 5-வது கோளாக உள்ள வியாழன் மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது ஆகும். இந்தக் கோளை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப் பப்பட்டுள்ள ஜூனோ விண்கலம் அரிய புகைப்படங்களை எடுத்து தொடர்ந்து அனுப்பி வருகிறது.

இதுவரை வெளியான படங்களில் வியாழனில் பெரிய அளவிலான சிவப்பு நிறப் (வெப்பம் அதிகமாக உள்ள) பகுதிகள் நிறைந்த படங்களே அதிகமாக இருந்தன. ஆனால் தற்போது பூமியில் உள்ள ஜெமினி தொலைநோக்கி எடுத்துள்ள படங்களில் குளிர் நிறைந்த பகுதிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தொலைநோக்கி வைக்கப்பட் டுள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள வானிலை ஆய் வாளர் கிளன் ஆர்டான் இதுபற்றி வர்ணிக்கும்போது, ‘வியாழனின் வளிமண்டலத்தில் ஒரு கவர்ச்சிகரமான நிகழ்வுகளின் ஒரு புதையல் இது’ என்றார்.

இதேபோல் அமெரிக்காவின் பெர்கிலியில் உள்ள கலிபோர் னியா பல்கலைக்கழக விண் வெளி ஆராய்ச்சியாளர் மைக்கேல் வாங் கூறுகையில், ‘வியாழனின் தற்போதைய புகைப் படம் செங்குத்து நிலையில் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வளிமண்டலத்தில் உள்ள வானிலை, காலநிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக கணக்கிட முடியாது. ஆனாலும் வியாழனின் வளிமண்டலத்தைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x