Published : 31 Jan 2017 10:01 AM
Last Updated : 31 Jan 2017 10:01 AM

விசா தடை பட்டியலில் பாக். சேர்க்கப்படலாம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல்

அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வருங்காலத்தில் பாகிஸ்தானியர் சேர்க்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை உயரதிகாரி ரீன்ஸ் ப்ரிபஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் கூறும்போது, “7 நாடு களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக முந்தைய ஒபாமா நிர்வாகமும் நாடாளு மன்றமும் கண்டறிந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு எதிராக முதற்கட்டமாக சோதனை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வருங் காலத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்க மக்களின் பாது காப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது. நீண்ட திட்டமிடலுக்குப் பிறகே தடைக்கான உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இந்த நாடுகள் பயங் கரவாதிகளின் புகலிடமாக இருப்ப துடன் அங்கு பயிற்சியும் அளிக்கப் படுகிறது. எனவே இந்த நாடு களுக்கு யார் செல்கிறார்கள், அங்கிருந்து யார் வருகிறார்கள் என்பதே நாங்கள் அறிய வேண் டியுள்ளது. அமெரிக்காவில் அசம் பாவிதங்களைத் தடுக்க இவற்றை செய்யவேண்டியுள்ளது” என்றார்.

இம்ரான்கான் கண்டனம்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக் கெட் வீரரும் தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கூறியதாவது: அதிபர் டொனால்டு ட்ரம்பின் விசா தடை நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தான் அகதிகள், பயணிகளுக்கும் அவர் தடை விதிக்க வேண்டுகிறேன். அமெரிக்காவிடம் இனிமேல் நாம் கை ஏந்தி நிற்க வேண்டாம். நமது சொந்த கால்களில் நிற்போம். அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x