Published : 05 Jan 2017 10:05 AM
Last Updated : 05 Jan 2017 10:05 AM

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து 158 கைதிகள் தப்பியோட்டம்: மர்ம கும்பல் தாக்கியதில் ஒரு காவலர் பலி

பிலிப்பைன்ஸில் சிறைச்சாலைக்குள் 100 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, 158 கைதிகளை விடுவித்துச் சென்றனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கே 950 கிமீ தொலைவில் கொடபேட்டோ மாகாணத்தில் அமைந்துள்ளது கிடாபவன் நகரம்.

முஸ்லிம் பிரிவினைவாதிகள், கிரிமினல் குழுக்கள், கம்யூனிஸ்ட் ஊடுருவல்காரர்கள் போன்ற பல்வேறு பிரிவினர் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள பிரிவினைவாதக் குழுக்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அண்மையில் பகிரங்க ஆதரவை தெரிவித்தனர்.

இந்நகரின் ஒதுக்குப்புறமான, வனப்பகுதியில் பழைய பள்ளிக் கூட கட்டிடத்தில் சிறைச்சாலை இயங்கிவருகிறது. இதில் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்பு களின் முஸ்லிம் தலைவர்கள் உட்பட, 1,511 கைதிகள் அடைக் கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று அதி காலைக்கு முன்பு, 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட கும்பல் ஆயு தங்களுடன் சிறைச்சாலைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். சிறைக் கதவுகளைத் தகர்த்து, உள்ளே அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்தனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த வன்முறையில், சிறை பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். சிறை யில் இருந்த 153 கைதிகள் தப்பி யோடினர்.

தப்பியோடிய கைதிகளையும், தாக்குதல் நடத்திய கும்பலையும் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

-ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x