Last Updated : 23 Jan, 2015 07:37 PM

 

Published : 23 Jan 2015 07:37 PM
Last Updated : 23 Jan 2015 07:37 PM

தவறான டேவிட் கேமரூன் ட்விட்டர் பக்கத்தில் நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமா

ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை பின்தொடர்வதற்கு பதிலாக அவரது பெயரில் இருக்கும் மற்றொரு நபரை தவறுதலாக பின்தொடர்ந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

உலகத் அரசியல் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் நெருங்கிய நண்பர்களாகவும் சகோதரத்துவத்துடனும் பழகக் கூடியவர்கள். ஆனால் ட்விட்டர் பக்கத்திலோ டேவிட் கேமரூன் என்ற பெயரில் உள்ள வேறொரு நபரை அதிபர் ஒபாமா பின்தொடர்ந்துள்ளார்.

ஒபாமாவின் ட்விட்டர் பக்கத்தை உலகம் முழுவதும் 645,000 பேர் பின்தொடர்கின்றனர். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து வரும் 'Organising For Action' நிறுவனம் வெறும் 382 பேரை பின்தொடர்ந்து கொண்டிருக்கும் @davidcameron என்ற பக்கத்தை தவறுதலாக பின்தொடர்ந்துள்ளதாக 'டெலிகிராஃப்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் உண்மையான பக்கம் @david_cameron என்பதாகும்.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா, "டேவிட் கேமரூன் எனது மிகச் சிறந்த நண்பர். மேலும், உலக அளவில் கேமரூன் எனக்கு மிகவும் நம்பத்தக்க மற்றும் நெருக்கமான கூட்டாளியும் கூட" என்று தவறான டேவிட் கேமரூன் பக்கத்தில் பதிவு செய்தார்.

உலக அரங்கில் கேமரூனை எங்கு சந்தித்தாலும் 'ப்ரோ' என்று அன்புடன் அழைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் தனது நட்பை ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் தொடர முடியவில்லையே என்று 'டெலிகிராஃப்' பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x