Last Updated : 30 Dec, 2016 09:35 AM

 

Published : 30 Dec 2016 09:35 AM
Last Updated : 30 Dec 2016 09:35 AM

சைபர் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள்: ஒபாமா தலைமையிலான அரசு திட்டம்

ரஷ்ய உளவுப் பிரிவு மற்றும் அதன் அதிகாரிளுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்க அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல்களில் ரஷ்ய தலையீடு இருந்ததாகவும், அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் இ-மெயில் மற்றும் சர்வர்களில் ஊடுருவி, சைபர் ஹேக்கிங் செய்ததாக, ரஷ்யா மீது அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக ஏற்கெனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அடுத்த மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இம்மாதத் துடன் ஒபாமாவின் அதிபர் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்குள்ளாக ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடை விதித்துவிட ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆசியுடன் இயங்கும் அந்நாட்டு உளவு அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக இந்த தடைகள் இருக்கும் என, அமெரிக்க ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தெரிவிக் கின்றன.

ரஷ்யா மீதான குற்றச்சாட்டு களை புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுத்து வருகிறார். எனவே, தற்போது விதிக்கப்படும் தடை உத்தரவுகள், ட்ரம்ப் நிர்வாகத் தால் திரும்பப் பெற முடியாத வகையில் வலுவானதாக இருக்க வேண்டும் என்பதில் ஒபாமா நிர்வாகத்தினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சைபர் ஹேக்கிங் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமெரிக்க ஏதேனும் தடை விதித்தால், அது ஆத்திரமூட்டும் செயலாகவே இருக்கும் என்றும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ராஜ்ஜிய ரீதியான எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் மீதே திரும்பப் பாயும். ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் அதே நட வடிக்கையை ரஷ்யாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டி யிருக்கும் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x