Last Updated : 01 Aug, 2015 08:49 PM

 

Published : 01 Aug 2015 08:49 PM
Last Updated : 01 Aug 2015 08:49 PM

சிரியாவில் புரட்சிப்படை முகாம் மீது அல்-காய்தா தாக்குதல்

சிரியாவில் அமெரிக்க ராணுவத்தால் பயிற்சி பெற்ற புரட்சிப் படையினரின் ஒரு முக்கிய முகாம் மீது அல்-காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியதாவது:

அலப்போ மாகாணத்தில் உள்ள டிவிஷன் 30 என்ற புரட்சிப் படையினரின் முகாம் மீது அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் சிரியா பிரிவான அல்-நுஸ்ரா முன்னணி தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பான மோதல் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் வான் வழி தாக்குதலில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரம் முகாமை பாதுகாக்க முயன்ற 8 புரட்சிப் படையினர் பலியாயினர். இவர்களை உயிருடன் பிடிப்பதற்கான அல்-நுஸ்ராவின் முயற்சி தோல்வியடைந்தது. இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தத் தாக்குதலில் தங்கள் படையைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே பலியானதாக டிவிஷன் 30 பிரிவு தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

டிவிஷன் 30 படையைச் சேர்ந்த 54 பேர் கடந்த மாதம் மத்தியில் சிரியாவுக்குள் நுழைந்தனர். அதில் 8 பேரை அல்-நுஸ்ரா கடந்த புதன்கிழமை கைது செய்தது என்று மனித உருமை அமைப்பு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x