Last Updated : 29 Nov, 2014 10:02 AM

 

Published : 29 Nov 2014 10:02 AM
Last Updated : 29 Nov 2014 10:02 AM

சடலத்துடன் அமரர் ஊர்தி கடத்தல்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சடலத்துடன் அமரர் ஊர்தி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் புளூ மவுண்டன்ஸ் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் சேத் ரிச்சர்ட்ஸன். சில நாள்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

அமரர் ஊர்தியில் சடலத்தை வைத்து கல்லறை தோட்டத்துக்கு செல்வதற்கு உறவினர்கள் தயார் நிலையில் இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஒரு நபர் டிரைவரை தள்ளிவிட்டுவிட்டு அமரர் ஊர்தியை ஓட்டிச் சென்றார்.

அதிர்ச்சி அடைந்த உறவினர் கள் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் மர்ம நபர் அமரர் ஊர்தியை வேகமாக ஓட்டினார். உயிரிழந்த சேத் ரிச்சர்ட்ஸனின் சகோதரர் டோபியஸ் தனது காரை எடுத்துக் கொண்டு அமரர் ஊர்தியை விரட்டிச் சென்றார். அதிவேகமாக சென்ற டோபியஸ் தனது காரை முன்னால் நிறுத்தி அமரர் ஊர்தியை நிறுத்தினார்.

அதனை கடத்திச் சென்ற மர்ம நபரிடம் எதற்காக இப்படி செய்தாய், அதில் எனது சகோதரரின் சடலம் இருக்கிறது என்று டோபியஸ் கூறினார். அந்த மர்ம நபர் எவ்வித பதற்ற மும் இன்றி, நான் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும், அதற்காகத்தான் அமரர் ஊர்தியை ஓட்டிச் செல்கிறேன் என்றார். சில நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மர்ம நபரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த நபர் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் மருத்துவமனையில் இருந்து தப்பிவந்துவிட்டார் என்பதும் தெரியவந்தது. அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தால் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 20 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x